வடமாகாண ஆளுநர் செயலகத்தில் சுற்றுலா விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்களுடனான கலந்துரையாடல்
உலகையே அச்சுறுத்திகொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள மக்களை பாதுகாப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை வடமாகாண ஆளுநர் முன்னெடுத்து வருகிறார். இலங்கையிலும் கொரோனா வைரஸ்ஸின் தொற்று தொடர்பிலான தகவலை அவதானிக்கும் போது வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் வெளிநாடு சென்று வந்தவர்கள் இந்நோய் தொற்றுக்கான பரம்பலை ஏற்படுத்தியவர்கள் என்று அவதானிக்கபட்டுள்ளது. இதன்பொருட்டு வடமாகாணத்திற்கான நிலமைகளை கருத்திற்கொண்டு இங்கு வருகை தந்த வெளிநாட்டு பயணிகள் தொடர்பாக வடமாகாண ஆளுநரின் பணிப்புரையில் ஆளுநர் செயலகம் உரிய அமைச்சுக்கள் […]
