இலங்கை அரச கடற்படையின் (Royal Ceylon Navy) முன்னாள் மதிப்பிற்குரிய உறுப்பினராகப் பணியாற்றிய மு.கனகரத்தினத்தின் நினைவைப் போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மு.கனகரத்தினம் நினைவுப் பேருந்து தரிப்பிடம் இன்று (25.08.2026) செவ்வாய்க்கிழமை காங்கேசன்துறை வீதியில் மருதனார்மடத்தில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
மு.கனகரத்தினத்தின் நினைவைப் போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இப்பேருந்து தரிப்பிடத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் வட மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் எம்.டி.கே.விஜேவர்த்தன ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
மு.கனகரத்தினம் முன்னாள் இலங்கை அரச கடற்படையின் மதிப்பிற்குரிய உறுப்பினராக ஆற்றிய சேவையை நினைவுகூரும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளதுடன், அவரது நினைவைப் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து பேணும் வகையிலும் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் உடுவில் பிரதேச செயலர், சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதேச சபை உறுப்பினர், கிராம அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


