38 job eng
வடக்கு மாகாணத்தில் விரைவில் அமைக்கப்படவுள்ள மூன்று முதலீட்டு வலயங்கள் உள்ளிட்ட புதிய முதலீட்டுத் திட்டங்களுக்குத் தேவையான மனிதவளத்தை அடையாளம் கண்டு, அதற்கேற்றவாறு இளைஞர்களைப் பயிற்றுவித்து வேலைவாய்ப்புகளுடன் இணைப்பதற்கான ஒருங்கிணைந்த பொறிமுறையை உருவாக்க வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். வடக்கு மாகாணத்தின் தற்போதைய தொழிலாளர் தேவை மற்றும் தொழில் வழங்குநர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்பான ஆரம்பக்கட்ட ஒருங்கிணைப்புக் கலந்துரையாடல் இன்று (25.11.2026) புதன்கிழமை ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. கலந்துரையாடலின் தொடக்கத்தில் கருத்துத் […]
