November 26, 2026

38 job sin

வடக்கு மாகாணத்தில் விரைவில் அமைக்கப்படவுள்ள மூன்று முதலீட்டு வலயங்கள் உள்ளிட்ட புதிய முதலீட்டுத் திட்டங்களுக்குத் தேவையான மனிதவளத்தை அடையாளம் கண்டு, அதற்கேற்றவாறு இளைஞர்களைப் பயிற்றுவித்து வேலைவாய்ப்புகளுடன் இணைப்பதற்கான ஒருங்கிணைந்த பொறிமுறையை உருவாக்க வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். வடக்கு மாகாணத்தின் தற்போதைய தொழிலாளர் தேவை மற்றும் தொழில் வழங்குநர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்பான ஆரம்பக்கட்ட ஒருங்கிணைப்புக் கலந்துரையாடல் இன்று (25.11.2026) புதன்கிழமை ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. கலந்துரையாடலின் தொடக்கத்தில் கருத்துத் […]

38 job sin Read More »

37 poster sin

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலின அடிப்படையிலான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சமூகப் பொறுப்புணர்வை வலியுறுத்தும் 16 நாள் சர்வதேச விழிப்புணர்வு இயக்க விழிப்புணர்வுச் செயற்பாடு இன்று (25.11.2026) புதன்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாண சமூக செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இவ்விழிப்புணர்வு நடவடிக்கையில், ‘நீதியே என் உரிமை’ என்ற தொனிப்பொருளிலும், ‘ஒன்றிணைவோம், பாதுகாப்போம், தடுப்போம்’ என்ற மையக்கருத்துடனும் முன்னெடுக்கப்படுகிறது. இந்நிகழ்வின்போது, இவ்வியக்கத்தின் விழிப்புணர்வுச் செய்தி மற்றும் பரப்புரை பதாகை என்பன

37 poster sin Read More »

36 ladies commission sin

வடக்கு மாகாணப் பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் முறைப்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கும் தேசிய மகளிர் ஆணைக்குழுவின் மாகாண அலுவலகமொன்றை நிறுவுவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்;டது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல்கள், சட்டப் பாதுகாப்பில் காணப்படும் இடைவெளிகள் மற்றும் அரச நிறுவனங்களின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது முன்வைக்கப்பட்டன. தேசிய மகளிர் ஆணைக்குழுவின் தலைவி கிரேஸ் ஆசீர்வாதம் உள்ளிட்ட ஆணையாளர்கள் மற்றும் வடக்கு மாகாணத்தின் பல்வேறு

36 ladies commission sin Read More »

35 saimurali governor sin

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரலாகப் பணியாற்றி, தனது பதவிக்காலத்தை நிறைவு செய்யும் ஸ்ரீமான் சாய் முரளிக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இடையில் இன்று (24.11.2026) செவ்வாய்க்கிழமை மாலை சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது, தமது கடந்தகாலப் பணிக்கால அனுபவங்களையும், வடக்கு மாகாணத்துடன் தொடர்புடைய நினைவுகளையும் இருவரும் பகிர்ந்துகொண்டனர். யாழ்ப்பாணத்திலிருந்து விடைபெற்றுச் செல்லும் சாய் முரளியின் எதிர்காலப் பயணம் சிறப்பாக அமையவும், அவர் புதிய பொறுப்புகளில் மேலும் பல சாதனைகளைப் படைக்கவும் ஆளுநர் தனது வாழ்த்துகளைத்

35 saimurali governor sin Read More »