03 library sin
வடக்கு மாகாணத்தில் நூலகச் சேவைகளை ஒருங்கிணைத்து, அவற்றை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மாகாண மட்டத்தில் நூலக சேவைகள் பணியகம் ஒன்றை உருவாக்குவதற்குத் தயாரிக்கப்பட்ட வரைவு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் இன்று (03.11.2026) செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டது. குறித்த வரைவை ஆராய்ந்த ஆளுநர், அதனை தேசிய நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபைக்கு அனுப்பி, அவர்களது ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதுடன், இப்பணியகத்தை உருவாக்குவதற்குத் தேவையான சட்டரீதியான ஏற்பாடுகள் தொடர்பிலும் விரிவாக ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்தார். […]
