November 18, 2026

27 future Ready sin

செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் வேகமாக மாற்றிவரும் உலகுக்கு ஏற்ற அறிவு, திறன்கள் மற்றும் சிந்தனைத் திறனுடன் மாணவர்களைத் தயார்ப்படுத்துவது அவசியம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். ‘‘Future Ready – Small Steps. Big Dreams’’ நூலின் இலங்கை வெளியீட்டு நிகழ்வு இன்று (17.11.2026) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் ஹூவர் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் இதனைத் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு […]

27 future Ready sin Read More »

26 Road Accident sin

வீதி விபத்துகளைத் தடுப்பதற்கு போக்குவரத்து விதிகளை மதிப்பதுடன், ஒவ்வொரு வீதி உபயோகத்தரிடமும் பொறுமை, சகிப்புத்தன்மை, உயிரின் பெறுமதி குறித்த அக்கறை மற்றும் சமூகப் பொறுப்புணர்வு அவசியம் எனத் தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், வீதி விதிகள் பொலிஸாருக்காக உருவாக்கப்பட்டவை அல்ல, அவை எமது உயிரையும் மற்றவர்களின் உயிரையும் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டவை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும் என வலியுறுத்தினார். வீதி விபத்துகளால் பாதிக்கப்பட்டோருக்கான நினைவேந்தல் நிகழ்வு இன்று (17.11.2026) செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில்

26 Road Accident sin Read More »

25 exibition sin

வடக்கு மாகாணத்தின் தனித்துவமான பண்பாட்டு அடையாளங்கள், மரபுகள் மற்றும் பாரம்பரியச் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாணப் பண்பாட்டியல் காண்பியக்கூடக் கண்காட்சியை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் இன்று (17.11.2026) செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைத்தார். வடக்கு மாகாணக் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சி, தென்மராட்சிக் கலாசார மண்டபத்தில் ஆரம்பமானது. வடக்கு மாகாணத்தின் பண்பாட்டுச் செழுமையையும் தனித்துவமான அடையாளங்களையும் வெளிப்படுத்துவதுடன், அவற்றைப் பாதுகாத்து

25 exibition sin Read More »

24 garbage eng

வடக்கு மாகாணத்தில் மருத்துவக் கழிவுகளை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உரிய முறையில் எரியூட்டி முகாமைத்துவம் செய்வதற்கான நிலையமொன்றை அமைப்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று (16.11.2026) திங்கட்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் மருத்துவக் கழிவுகளை உரிய முறையில் கையாள்வதற்கும், தற்போதைய நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அவற்றை எரியூட்டுவதற்குமான நிலையமொன்றைத் தனியார் முதலீட்டின் ஊடாக அமைப்பதற்கு முதலீட்டாளர் ஒருவர் முன்மொழிவை முன்வைத்திருந்தார். இதனைத்

24 garbage eng Read More »

funereal

வல்வெட்டித்துறை நகர சபையின் கௌரவ தவிசாளராகப் பணியாற்றியவரும், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான மறைந்த எம்.கே.சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் இன்று (16.11.2026) திங்கட்கிழமை காலை நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சனிக்கிழமை (14.11.2026) இரவு காலமான எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியைகள் இன்று வல்வெட்டித்துறையிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றன. இதன்போது ஆளுநருடன் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்,

funereal Read More »