funereal

வல்வெட்டித்துறை நகர சபையின் கௌரவ தவிசாளராகப் பணியாற்றியவரும், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான மறைந்த எம்.கே.சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் இன்று (16.11.2026) திங்கட்கிழமை காலை நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சனிக்கிழமை (14.11.2026) இரவு காலமான எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியைகள் இன்று வல்வெட்டித்துறையிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றன. இதன்போது ஆளுநருடன் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மற்றும் வல்வெட்டித்துறை நகர சபையின் செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டு அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த எம்.கே.சிவாஜிலிங்கம் தொடர்பில் ஆளுநர் வெளியிட்டுள்ள அஞ்சலிக் குறிப்பில், அவர் பல்வேறு பதவிகளை வகித்திருந்தபோதிலும், ஒருபோதும் தனக்காகவோ அல்லது தன்னைச் சார்ந்தவர்களுக்காகவோ தனிப்பட்ட உதவிகளையோ சலுகைகளையோ கோரியதில்லை என்றும், தனது மக்களின் உரிமைகளுக்காகவே குரல் கொடுத்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.