November 4, 2026

வடக்கு மாகாண நூலக சேவைகள் பணியகத்தை உருவாக்குவதற்கான வரைவு ஆளுநரிடம் கையளிப்பு

வடக்கு மாகாணத்தில் நூலகச் சேவைகளை ஒருங்கிணைத்து, அவற்றை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மாகாண மட்டத்தில் நூலக சேவைகள் பணியகம் ஒன்றை உருவாக்குவதற்குத் தயாரிக்கப்பட்ட வரைவு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் இன்று (03.11.2026) செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டது. குறித்த வரைவை ஆராய்ந்த ஆளுநர், அதனை தேசிய நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபைக்கு அனுப்பி, அவர்களது ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதுடன், இப்பணியகத்தை உருவாக்குவதற்குத் தேவையான சட்டரீதியான ஏற்பாடுகள் தொடர்பிலும் விரிவாக ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்தார். […]

வடக்கு மாகாண நூலக சேவைகள் பணியகத்தை உருவாக்குவதற்கான வரைவு ஆளுநரிடம் கையளிப்பு Read More »

யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரையில் புண்ணிய உற்சவம்; ஆளுநர் பங்கேற்பு.

யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ நாக விகாரையின் கட்டடப் புண்ணிய உற்சவம் மற்றும் மதிய நேர அன்னதான நிகழ்வு நேற்று (01.11.2026) ஞாயிற்றுக்கிழமை விகாரை வளாகத்தில் நடைபெற்றது. விகாராதிபதி வணக்கத்திற்குரிய கல்யாணி மகாசங்கத்தேரோ ஸ்ரீ விமல தேரர் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய் முரளி அவர்கள், யாழ்ப்பாண மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் யாழ்ப்பாணப் பிரதேச செயலர்

யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரையில் புண்ணிய உற்சவம்; ஆளுநர் பங்கேற்பு. Read More »