November 24, 2026

34 consolidate general farewell sin

யாழ்ப்பாணத்திலிருந்து சாய் முரளி வெளியேறினாலும், வடக்கு மாகாண மக்களுடன் அவர் உருவாக்கிய உறவும் நட்பும் தொடரும் என நம்புவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரலாகப் பணியாற்றிய சாய் முரளி அவர்களின் பிரிவுபசார நிகழ்வு இன்று (23.11.2026) திங்கட்கிழமை இரவு யாழ்ப்பாணம் ஜே ஹெஸ்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும்போதே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக வடக்கு மாகாண மக்களுடன் நெருக்கமாகப் பணியாற்றிய ஒருவரை வழியனுப்புவது […]

34 consolidate general farewell sin Read More »

33 ppt hospital sin

பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் சேவைகளை மேலும் வலுப்படுத்துவதற்குத் தேவையான ஆளணி, மருத்துவ உபகரணங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று (23.11.2026) திங்கட்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் பல்வேறு ஆளணிப் பற்றாக்குறைகளுக்கு மத்தியிலும் அர்ப்பணிப்புடன் மக்களுக்கான மருத்துவச் சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருவதற்குப் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார். மருத்துவமனையின்

33 ppt hospital sin Read More »

32 mythiri sethu sin

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய மாணவர் படையணிகளின் கூட்டு சைக்கிள் பயணமான ‘மைத்திரி சேது யாத்திரை 2027’ இன் இலங்கைக் கட்ட நிறைவு நிகழ்வு இன்று (22.11.2026) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், இந்தியா மற்றும் இலங்கை தேசிய

32 mythiri sethu sin Read More »

31 Montfort sin

கல்வியிலே மேம்படுபவர்கள் தலைமைத்துவம் அற்றவர்களாக இருந்தால் சமூகத்துக்கு எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. கல்வியிலே உயர்ந்தாலும் நல்ல பண்பு இருக்க வேண்டும்;. சிறந்த தலைமைத்துவத்தைக் கொண்டிருக்க வேண்டும். எனவே, நாங்கள் பிள்ளைகளைத் தலைமைத்துவமிக்கவர்களாகவும் மனிதநேயமிக்கவர்களாகவும் வளர்க்க வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி மொன்போர்ட் சர்வதேச பாடசாலையின் (Montfort International School) 3ஆவது ஆண்டுவிழா நிகழ்வு, பாடசாலை அதிபர் கலாநிதி ஜேம்ஸ் ரொபட் தலைமையில் நேற்று (20.11.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல்

31 Montfort sin Read More »