November 14, 2026

19 long bus eng

100 கிலோமீற்றருக்கு மேற்பட்ட தூரங்களில் சேவையில் ஈடுபடும் இலங்கைப் போக்குவரத்துச் சபை பேருந்துகள், எதிர்வரும் டிசெம்பர் முதலாம் திகதி முதல் புதிய நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்தே தமது சேவைகளை ஆரம்பிக்க வேண்டும் என இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன பணிப்புரை விடுத்தார். வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில், இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் யாழ்ப்பாணப் பேருந்து நிலையச் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான […]

19 long bus eng Read More »

18 jaffna tour eng

வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையைத் திட்டமிட்ட வகையில் வளர்ச்சியடையச் செய்வதற்குத் தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்பு அவசியம் எனத் தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், முதலீட்டாளர்களை வரவேற்று, அவர்கள் எதிர்கொள்ளும் நிர்வாக மற்றும் நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதில் அதிகாரிகள் நேர்மையான அணுகுமுறையுடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தினார். யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சுற்றுலா முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தும்போது எதிர்கொள்ளப்படும் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (13.11.2026) வெள்ளிக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் தலைமையில்

18 jaffna tour eng Read More »

17 renewal energy eng

வடக்கு மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை மேம்படுத்துவதற்கான திட்டங்களை வரவேற்பதாகத் தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், இத்திட்டங்களை முன்னெடுக்கும்போது மக்களின் வாழ்வாதாரங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், விவசாயம், மீன்பிடி, காணிப் பயன்பாடு, சுற்றுச்சூழல் மற்றும் உள்ளூர் சமூகங்களின் நலன்களை முழுமையாகக் கருத்திற்கொண்டு திட்டமிட வேண்டும் என வலியுறுத்தினார். வடக்கு மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அபிவிருத்திக்கான மூலோபாய சுற்றாடல் மதிப்பீடு தொடர்பான முதலாவது வழிகாட்டல் குழுக் கூட்டம் இன்று (11.11.2026) புதன்கிழமை கொழும்பிலுள்ள மின்சக்தி அமைச்சில்

17 renewal energy eng Read More »