November 7, 2026

12 school colsed eng

தீபாவளித் திருநாளை முன்னிட்டு, அதற்கு மறுநாளான நவம்பர் 9ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துத் தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படுவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார். இந்த விசேட விடுமுறைக்குப் பதிலாக, நவம்பர் 14ஆம் திகதி சனிக்கிழமை பதில் பாடசாலை நடைபெறும். அதேவேளை, வடக்கு மாகாணத்திலுள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் நவம்பர் 9ஆம் திகதி வழமைபோன்று இயங்கும் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

12 school colsed eng Read More »

11 bar close eng

தீபாவளித் திருநாளை முன்னிட்டு நாளை (08.11.2026) ஞாயிற்றுக்கிழமை வடக்கு மாகாணத்திலுள்ள உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கு மாண்புமிகு ஜனாதிபதியின் பணிப்புக்கு அமைவாக மதுவரித் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. வடக்கு மாகாணத்திலுள்ள இந்து அமைப்புகள் மற்றும் மதத் தலைவர்கள், தீபாவளி தினத்தன்று மாகாணம் முழுவதும் மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகனிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர். இக்கோரிக்கையைத் தொடர்ந்து, வடக்கு மாகாண ஆளுநர் மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு

11 bar close eng Read More »

09 dog vacination eng

வடக்கு மாகாணத்தில் அடுத்த ஆண்டு 30,000 நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சை மேற்கொள்வதுடன், நாய்களுக்கான தடுப்பூசித் திட்டத்தையும் விரிவுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணக் கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று (06.11.2026) வெள்ளிக்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. வெறிநாய்க்கடி நோயை (ரேபிஸ்) ஒழிப்பதுடன், கட்டுப்பாடின்றிச் சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கையை மனிதாபிமான முறையில் முகாமைத்துவம் செய்வதற்கான ஒருங்கிணைந்த ‘ஒரே சுகாதார’ அணுகுமுறையிலான திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின்

09 dog vacination eng Read More »

08 agri eng

வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித் துறைகளை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்த முடியும் எனத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உற்பத்தியை அதிகரிப்பதுடன் சந்தை வாய்ப்புகள், நியாயமான கொள்முதல் விலை, சேமிப்பு மற்றும் பெறுமதிசேர் உற்பத்தி ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். வடக்கு மாகாணத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் நன்னீர் மீன்பிடித் துறைகளில் சிறப்பாகச் செயற்பட்ட விவசாயிகள், பண்ணையாளர்கள்

08 agri eng Read More »

07 st charls eng

ஆசிரியர் ஒருவரின் உண்மையான வெற்றி, மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளை உயர்த்துவதில் மாத்திரமன்றி, அவர்களின் மனதில் அன்பையும் நம்பிக்கையையும் உருவாக்கி, பல ஆண்டுகள் கடந்த பின்னரும் நன்றியுடன் நினைவுகூரப்படும் மனிதராகத் திகழ்வதிலேயே தங்கியுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் புனிதர் சாள்ஸ் மகா வித்தியாலயத்தின் 150ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று (05.11.2026) வியாழக்கிழமை காலை பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் கு.லெனின்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே

07 st charls eng Read More »