dewali greeting sin

தீபாவளி என்பது வீடுகளிலும் வீதிகளிலும் தீபங்களை ஏற்றி ஒளி பரப்புகின்ற ஒரு பண்டிகை மட்டுமல்ல. இருளை அகற்றி ஒளியை நிலைநாட்டுவது போல, அதர்மத்தை அகற்றி தர்மத்தை நிலைநாட்டுவதையும், அநீதியை ஒழித்து நீதியை நிலைபெறச் செய்வதையும் நினைவூட்டும் உயரிய திருநாளாகும்.

தீமையின் மீது நன்மையும், அநீதியின் மீது நீதியும் வெற்றிகொள்வதையே தீபாவளி உணர்த்துகிறது. தவறிழைத்தவர்கள் தமது செயல்களுக்கான விளைவுகளை எதிர்கொள்வதும், அநீதிக்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய முறையில் தண்டிக்கப்படுவதும் நீதியின் வெற்றியாகும். இத்தகைய பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படும்போது, உண்மைகளையும் சட்டத்தின் நடைமுறைகளையும் புரிந்துகொள்ளாமல் அதனை விமர்சிப்பது பொருத்தமானதல்ல.

இந்தத் தீபாவளித் திருநாளில் ஏற்றப்படும் ஒவ்வொரு தீபமும் நம்முள் ஓர் ஒளியை ஏற்றட்டும். அது அறியாமையை அகற்றும் அறிவின் ஒளியாகவும், வெறுப்பை அகற்றும் அன்பின் ஒளியாகவும், அநீதியை எதிர்க்கும் துணிவின் ஒளியாகவும், பொய்மையை வெல்லும் உண்மையின் ஒளியாகவும் அமையட்டும்.

இனம், மதம், மொழி வேறுபாடுகளைக் கடந்து, பரஸ்பர மரியாதையுடனும் புரிந்துணர்வுடனும் வாழும் சமூகமாக நாம் உயர வேண்டும். எமது இல்லங்களில் மட்டுமன்றி, உள்ளங்களிலும் ஒளி பரவ வேண்டும். ஒவ்வொருவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, நம்பிக்கை மற்றும் முன்னேற்றம் மலர வேண்டும்.

அனைத்து இந்து மக்களுக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

நா.வேதநாயகன்
வடக்கு மாகாண ஆளுநர்