Application for Diploma in Home Science (One year) and National Vocational Qualification – Level 4 in Tailoring. /
மனைப்பொருளியல் டிப்ளோமா தர சான்றிதழ் கற்கை நெறியுடன் இணைந்த ஆடை வடிவமைத்தலுக்கான தொழில் தகைமை முறைமை கற்கை நெறிக்கான (NVQ Level – 4) விண்ணப்ப படிவம்.
மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மகளிர் அபிவிருத்தி நிலையத்தால் வருடாவருடம் நடாத்தப்படும் 11 பாடவிதானங்களை கொண்ட ஒரு வருட மனைப்பொருளியல் டிப்ளோமா உடன் இணைந்த, ஆடை உற்பத்திக்கான தேசிய தொழில் தகைமை – 04 (NVQ Level – 04) கற்கை நெறிக்கான மாணவர்களை உள்வாங்குவதற்கான நேர்முகத் தேர்விற்கான விண்ணப்பங்களானது வடமாகாணத்திற்குட்பட்ட அனைத்து பிரதேச செயலகங்களாலும் கோரப்பட்டுள்ளது.
ஆகவே, மேற்படி பிரதேச செயலக எல்லைப்பரப்பிற்குள் வசிக்கும் 18 – 25 வயதிற்கு உட்பட்ட மகளிர் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமைக்கு முன்னர் பிரதேச செயலகத்திற்கு சென்று ‘கிராம அபிவிருத்தி பிரிவில்’ பதிவுகளை மேற்கொள்வதன் மூலமாக அதன்பின் நடைபெறும் நேர்முக பரீட்சையில் தேர்வாவதன் மூலம் மேற்படி பயிற்சியினை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்
Click on Here to Download Application Form