தன்னார்வ சேவையாளன் அமரர் சிவகுருநாதன் ரங்கராஜா அவர்களிற்கான இரங்கல்

இவ்வுலகில் பலர் மானிடராக அவதரித்து மறைவது இயல்பானதெனினும் சிலரது இழப்பு இவ்வுலகை விட்டு பிரிகின்றபோது எமக்கு ஈடு இணையில்லா இழப்பாக அமைந்து விடுகிறது. அந்த வகையில் அமரர் சிவகுருநாதன் ரங்கராஜா அவர்களின் இழப்பு வடமாகாணத்திற்கு ஓர் பாரிய இழப்பாகும்.
அமரர் அவர்கள் உண்மை, நேர்மை, கடமை உணர்வு, கண்ணியம், கட்டுப்பாடு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, புத்தாக்க உணர்வு, இரக்க சுபாவம், நவீனத்துவ சிந்தனை என்பவற்றை தன்னகத்தே கொண்டு வாழ்ந்த உயரிய பண்பாளாராக விளங்கினார். இவர் தான் பணியாற்றிய காலத்தில் பல உயர் பதவியுயர்வுகளை வகித்து அப்பதவிகளுக்கு உயிரோட்டம் கொடுத்து பெருமை சேர்த்தார் என்பதில் எந்தவித ஜயப்பாடும் இல்லை.
அமரர் சி.ரங்கராஜா அவர்கள் 1977 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்டார். வடக்கு கிழக்கு மாகாணம் மற்றும் வடக்கு மாகாணம் ஆகியவற்றில் 2002-2010 வரையான காலப்பகுதியில்  பிரதம செயலாளர் என்ற முக்கிய பதவியை வகித்து இவ் மாகாணங்களுக்கு அளப்பெரிய சேவையாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.

Online Casinos With the Highest Payout Rates in the USA

இவர் சேவையாற்றிய காலப்பகுதியில் பல விடயங்களுக்கு பங்களிப்பு செய்ததுடன் பல அடைவு நிலைகளையும் பெற்று வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு தனது சேவையை அர்ப்பணித்தது அளப்பரிய பணியாகும். அந்தவகையில் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தி திட்டங்களை உருவாக்கி தந்திரோபாயத் திட்டங்களை வகுத்தமை, பல கருத்திட்டங்களை உருவாக்க காரண கர்த்தாவாக இருந்தமை  உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற வெளிநாட்டு நிதி நிறுவனங்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி, பல கருத்திட்டங்களை வடக்கு கிழக்கு மாகாணப் பகுதிகளில் நடைமுறைப்படுத்தியமை,  திட்ட அமுலாக்கலை கணணி மயப்படுத்தியமை போன்ற பல பணிகள் மற்றும் திட்டமிடல் செயல்முறைமைகளை ஸ்தாபிப்பதற்காக முன்னின்று உழைத்த பெருமை அமரர் அவர்களையே சாரும்.
இவ்வாறான ஒரு நல்லறிவாளன், ஒரு சேவையாளன் மனிதாபிமானமிக்க முறையில் மக்களுடன் பழகியதுடன் நட்புக்கும் முன்னுரிமை கொடுப்பதில் என்றும் பின்னிற்கவில்லை.
இவ்வாறான ஒரு மனிதாபிமானமிக்க பண்பாளன் மற்றும் தன்னார்வத்துடன் பல பணிகளை மேற்கொண்டு மக்களுக்காக சேவையாற்றிய மகான் எம்மை விட்டு பிரிந்தது எமது சமூகத்திற்கு பேரிழப்பாகும். இவரது பிரிவு எம் எல்லோருக்கும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. இவரின் வழிகாட்டலில் உருவாகியவர்கள் இன்றும் எம் மத்தியில் உயர்பதவிகளை வகித்து சிறப்பாக சேவையாற்றுவது குறிப்பிடத்தக்கது. எனவே இவரது இலட்சியப்பாதையை பின்பற்றி மக்களுக்கு சேவையாற்றுவதில் எமது பங்கு அளப்பரியது. அன்னாரின் ஆத்மா இறைவனின் பாதாரவிந்தங்களை அடைய பிரார்த்திப்பதுடன் அன்னாரின் குடும்பம் ஆறுதல் அடைய இறைவனை வேண்டுகின்றோம்.

உத்தியோகத்தர்கள்
வடமாகாணசபை.