விவசாயிகளுக்கும் வீட்டுத்தோட்டச் செய்கையாளர்களுக்கும் உதவுமுகமாக யாழ் மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலகத்தினால் மத்திய விவசாயத் திணைக்களத்தின் விதை மற்றும் நடுகைப்பொருள் அபிவிருத்தி மற்றும் விற்பனைப் பிரிவு, யாழ் மாவட்ட விதையுற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம், காரைநகர் இளம் விவசாயிகள் கழகம், வெங்காய உண்மை விதையுற்பத்தியாளர் சங்கம் ஆகியவற்றினுதவியுடன் நடமாடும் சேவையினுடான விதை மற்றும் நடுகைப்பொருள் விற்பனை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
நடமாடும் விற்பனையினூடு பயற்றை, வெண்டி, பாகல், தக்காளி, கத்தரி ,கீரை,கெக்கரி ஆகிய மரக்கறி விதைகளும், மிளகாய், வெங்காய உண்மை விதை, நிலக்கடலை, பயறு, குரக்கன், கௌபி, உழுந்து, சோளம், மரவள்ளி துண்டங்கள், காளான் வித்திகள் ,பொதி செய்யப்பட்ட மரக்கறி கன்றுகள் ,பழமரக்கன்றுகள் என்பனவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
விவசாயப் போதனாசிரியர் பிரிவு ரீதியாக மேற்கொள்ளப்பட்ட நடமாடும் விற்பனைச் செயற்பாடுகள் தொடர்பான விபரங்கள்
திகதி | விவசாயப் போதனாசிரியர் பிரிவு | பயனாளிகள் எண்ணிக்கை | விநியோகிக்கப்பட்ட விதைகள் மற்றம் நடகைப் பொருட்கள் |
10.04.2020 | சாவகச்சேரி | 72 | பயற்றை விதை – 8.51 கிலோ
பாகல் விதை – 6.205 கிலோ வெண்டி விதை- 1.3 கிலோ தக்காளி விதை- 0.5 கிலோ கத்தரி விதை – 0.7 கிலோ கீரை விதை – 7.0 கிலோ நிலக்கடலை விதை -546.75 கிலோ பயறு விதை -192 கிலோ உளுந்து விதை – 133.3 கிலோ குரக்கன்விதை – 299.8 கிலோ சோளம் விதை – 15.35 கிலோ கௌப்பி விதை – 94 கிலோ மிளகாய் கிலோ விதை – 15.25 கிலோ வெங்காய உண்மை விதை – 10 கிலோ பொதி செய்யப்பட்ட மரக்கறி கன்றுகள்- 388 மரவள்ளித் துண்டங்கள் – 5872 பழமரக்கன்றுகள் – 883 காளான் வித்திகள்- 2 கிலோ(20 பொதிகள்) மரக்கறி நாற்றுக்கள் – 11770 தினை விதை – 9 கிலோ கெக்கரி விதை – 1 கிலோ |
11.04.2020 | தெல்லிப்பளை | 128 | |
15.04.2020 | நல்லூர் | 85 | |
17.04.2020 | தொல்புரம் | 330 | |
17.04.2020 | புத்தூர் | 220 | |
18.04.2020 | உரும்பிராய் | 148 | |
18.04.2020 | கைதடி | 58 | |
20.04.2020 | உடுவில் | 65 | |
21.04.2020 | கரவெட்டி & புலோலி | 55 | |
22.04.2020 | வேலணை & ஊர்காவற்றுறை | 120 | |
23.04.2020 | வட்டுக்கோட்டை | 150 | |
28.04.2020 | வசாவிளான் & புன்னாலைக்கட்டுவன் | 85 | |
29.04.2020 | சண்டிலிப்பாய் | 82 | |
30.04.2020 | அம்பன் | ||
11.05.2020 | உடுவில் | 30 | |
12.05.2020 | தொல்புரம் | 31 | |
18.05.2020 | வேலணை | 60 |
அச்சுவேலி தாய்த்தாவரப்பண்ணை, திருநெல்வேலி ,மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையம் மற்றும் யாழ் மாவட்ட விதையுற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம் என்பவற்றினூடாக விவசாயப் போதனாசிரியர் பிரிவு ரீதியாக நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற நடமாடும் விற்பனைச் செயற்பாடுகளின் கால அட்டவணையும் நடமாடும் விற்பனையின் போது பெற்றுக் கொள்ளக்கூடிய மரக்கறி நாற்றுக்கள், பழமரக்கன்றுகள் என்பவற்றின் விபரமும் கீழே தரப்பட்டுள்ளது.
நடமாடும் விற்பனைச்செயற்பாடுகளின் கால அட்டவணை
திகதி | நேரம் |
விவசாயப் போதனாசிரியர் பிரிவு |
09.06.2020 | 7.00 மு.ப.- 3.30 பி.ப | கரவெட்டி, அம்பன், புலோலி |
12.06.2020 | 7.00 மு.ப.- 3.30 பி.ப | நல்லூர் |
15.06.2020 | 7.00 மு.ப.- 3.30 பி.ப | உரும்பிராய், புத்தூர் |
16.06.2020 | 7.00 மு.ப.- 3.30 பி.ப | சாவகச்சேரி, கைதடி |
18.06.2020 | 7.00 மு.ப.- 3.30 பி.ப | தெல்லிப்பளை |
19.06.2020 | 7.00 மு.ப.- 3.30 பி.ப | சண்டிலிப்பாய் |
26.06.2020 | 7.00 மு.ப.- 3.30 பி.ப | தொல்புரம் |
நடமாடும் விற்பனையின்போது பெற்றுக்கொள்ளக்கூடிய பழமரக்கன்றுகள், நாற்றுக்கள், விதை பொருட்கள் விபரம்
பழமரக்கன்றுகள் மற்றும் ஏனைய மரக்கன்றுகள் |
நாற்றுக்கள் | பொதி செய்யப்பட்ட மரக்கறிக்கன்று | விதை பொருட்கள் |
கொடித்தோடை | சுண்டன் கத்தரி | சுண்டன் கத்தரி | மிளகாய் |
தேசி | மிளகாய் (MICH 3) | மிளகாய் (MICH 3) | வெண்டி |
விளாத்தி | தக்காளி | தக்காளி (பத்மா) | புசிற்றாவோ |
மாதுளை | கோவா | கத்தரி (தின்னவேலி ஊதா) | வத்தகை |
முழுநெல்லி | புடோல் | ||
கொய்யா | பாகல் | ||
ரகன் | |||
அகத்தி | |||
கற்றாளை | |||
கோப்பி | |||
தவசி முருங்கை | |||
சண்டி | |||
முருங்கை | |||
முடக்கொத்தான் | |||
நாரத்தை |