The Hon. Governor of Northen Province, N. Vethanayahan, stated that works to identify lands have been initiated through the respective District Secretariats to establish industrial zones in Mannar, Kilinochchi and Mullaitivu Districts aiming to develop the industrial sector in Northern Province.

This was announced during the discussion held today (14.10.2026) at Governor’s Secretariat between the Governor and Hewage Jazas/ Chairman, Industrial Board of Ceylon.

The Governor noted that these identification efforts have been initiated in accordance with agreement reached earlier during the meeting with the Deputy Minister of Industry and Entrepreneurship Development.

Further, during this meeting, the Chairman of Industrial Board of Ceylon explained the enhancement of infrastructure of Atchuveli and Poonthoddam Industrial Zones, investor attraction projects, loan facilities and other coordinating activities. The Secretary to the Governor and Director of Industrial Zone participated in the discussion.

செயலாளர் மற்றும் கைத்தொழிற்பேட்டையின் இயக்குநர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்துள்ள முதலாவது கியூபத் தூதுவர் என்ற வகையில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும், இந்தப் பயணம் வடக்கு மாகாணத்துக்கும் கியூபாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றும் இலங்கைக்கான கியூபக் குடியரசின் தூதுவர் மேன்மைதங்கிய திருமதி பெட்ரிசியா லாசாரா பெகோ குவேரா தெரிவித்தார்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கைக்கான கியூபக் குடியரசின் தூதுவர் மேன்மைதங்கிய திருமதி பெட்ரிசியா லாசாரா பெகோ குவேராவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (14.10.2026) புதன்கிழமை மாலை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த கியூபத் தூதுவர், வடக்கு மாகாணத்துக்கு வருகை தரும் முதலாவது கியூபத் தூதுவர் என்ற வகையில் தாம் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டார். இந்தப் பயணம் வடக்கு மாகாணத்துடனான கியூபாவின் உறவுகளை வளர்ப்பதற்கான புதிய வாசலைத் திறந்துள்ளதாகவும் தெரிவித்தார். இலங்கையின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் விளங்குவதாகக் குறிப்பிட்ட அவர், கியூபாவின் முக்கிய தலைவரான பிடல் காஸ்ட்ரோவின் 100ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகள் யாழ்ப்பாணத்திலும் நடைபெறவுள்ளதாகத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், பிடல் காஸ்ட்ரோ மற்றும் கியூபா தொடர்பில் தாம் பல விடயங்களை அறிந்துள்ளதாகக் குறிப்பிட்டதுடன், முதல் தடவையாக வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்துள்ள தூதுவரை வடக்கு மாகாண மக்கள் சார்பில் வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது வடக்கு மாகாணத்தின் பொருளாதார வளங்கள், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இச்சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம், புதிய திட்ட முன்மொழிவுகள், திணைக்களங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தீர்வு காணப்படாத மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இன்று (14.10.2026) புதன்கிழமை நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இடம்பெற்றது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் இணைத் தலைமையிலும் யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்டச் செயலர் ம.பிரதீபன் வரவேற்புரையாற்றினார்.

தொடர்ந்து உரையாற்றிய இணைத் தலைவரும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநருமான நா.வேதநாயகன், கடந்த ஆண்டை விட இவ்வாண்டு இருமடங்கு நிதி கிடைக்கப்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். எனினும், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சில அபிவிருத்தித் திட்டங்களை மீள்மதிப்பீடு செய்து முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வீதி அபிவிருத்திப் பணிகளுக்குத் தேவையான மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதிலும் சிக்கல்கள் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் திட்டமிடப்பட்ட அபிவிருத்திப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சில திட்டங்கள் அடுத்த ஆண்டிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அனைத்து திணைக்களங்களும் ஒன்றிணைந்து, மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் திட்டங்களைச் செயற்படுத்தி நிறைவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான தகவல்களை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்குச் சமர்ப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். அத்துடன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் உரிய அதிகாரிகள் கலந்துகொள்வதைத் திணைக்களங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அடுத்த ஆண்டு அரசாங்கம் கூடுதல் நிதியை ஒதுக்கவுள்ள நிலையில், அதனை உரிய வகையில் பயன்படுத்தி அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்குத் திணைக்களங்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைமுறைப்படுத்துவதற்காக அனுமதி கோரப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

2026ஆம் ஆண்டுக்கான ‘சமூக சக்தி’ தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ், 15 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 334 திட்டங்களை முன்னெடுப்பதற்காக 651.96 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு தொடர்பான முன்மொழிவுகள் ஆராயப்பட்டன.

அத்துடன், கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 18 வீதிகளைப் புனரமைப்பதற்கான முன்மொழிவுகளும் பரிசீலிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 4,372 மீற்றர் நீளமான வீதிகளைப் புனரமைப்பதற்காக 191.40 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய வீதி வலையமைப்பில் உள்ளடங்காத வீதிகளில் காணப்படும் பாதுகாப்பற்ற இடங்களைச் சீரமைப்பதற்கான முன்மொழிவுகளும் ஆராயப்பட்டன. வீதிப் பாதுகாப்பு வேலிகள் அமைத்தல், வடிகால்களைப் பாதுகாப்பாக மூடுதல், பாடசாலைகளுக்கு அருகில் பாதசாரிக் கடவைகள் மற்றும் எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகளை அமைத்தல் உள்ளிட்ட 28 பணிகளுக்காக 62.95 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

மாவட்டச் செயலகம், மத்திய அரசுத் திணைக்களங்கள் மற்றும் வடக்கு மாகாண சபை ஆகியவற்றால் இந்த ஆண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற அறிக்கைகள் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டன. வீடமைப்பு, விவசாயம், கிராமிய வீதி அபிவிருத்தி, சிறு நீர்ப்பாசனம், குடிநீர் விநியோகம் மற்றும் சமூக நலன் சார்ந்த திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டது.

திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் திணைக்களங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தடைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றுக்குத் தீர்வு காண்பதற்குச் சம்பந்தப்பட்ட திணைக்களங்களும் நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

சுன்னாகத்தில் அமைந்துள்ள சுழலும் உயிரியல் சுத்திகரிப்பு ஆலையையும், நாவற்குழிக் களஞ்சியத்தில் வைக்கப்பட்டுள்ள ஏனைய இரண்டு உயிரியல் சுத்திகரிப்பு ஆலைகளையும் கையளிப்பது தொடர்பான விடயமும் கலந்துரையாடப்பட்டது.

அதேபோன்று, நெடுந்தீவில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குக் கடற்படையினரின் பங்களிப்புடன் எரிபொருளைக் கொண்டு செல்வது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்காக வடக்கு மாகாண சபையால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளைத் துரிதப்படுத்துதல், நடைமுறையிலுள்ள திட்டங்களின் முன்னேற்றத்தைக் கண்காணித்தல், திணைக்களங்கள் எதிர்கொள்ளும் தடைகளுக்குத் தீர்வு காணுதல் மற்றும் மக்கள் முன்வைக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் துறைசார் நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகிய விடயங்களும் கூட்டத்தில் கவனத்தில் கொள்ளப்பட்டன.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.றஜீவன், ச.ஸ்ரீ பவானந்தராஜா, சிவஞானம் சிறீதரன், இராமநாதன் அர்ச்சுனா ஆகியோரும், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் கௌரவ சி.வி.கே.சிவஞானம் அவர்களும் கலந்துகொண்டனர். அத்துடன், பிரதி மேயர் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தவிசாளர்களும் பங்கேற்றனர்.

மேலும், வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலகப் பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர், முப்படைகளின் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள், திணைக்களத் தலைவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

 

 

வடக்கு மாகாணத்தின் உற்பத்திப் பொருட்களையும் சேவைகளையும் சர்வதேசச் சந்தைகளுடன் இணைத்து, உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், ‘வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு 2027’ அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20, 21ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டைச் சிறப்பாக முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்று (13.10.2026) செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இலங்கை முகாமைத்துவக் கழகத்தின் ஏற்பாட்டில், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் தலைமையில், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகம், ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்படுகிறது. இதனை முன்னெடுப்பதில் ஆளுநர் செயலகம், மாகாண சபை மற்றும் மாவட்டச் செயலகங்கள் இணைந்து செயற்படவுள்ளன.

வடக்கு மாகாணத்தில் காணப்படும் உற்பத்தி வளங்களைப் பயனுள்ள வகையில் பயன்படுத்தி, அவற்றுக்கு வெளிநாட்டுச் சந்தைகளில் விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்துவதே இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் உள்ளூர் உற்பத்தியாளர்கள், சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோரை வெளிநாட்டுக் கொள்வனவாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுடன் நேரடியாக இணைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.

விவசாயம், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், பனைசார் உற்பத்திகள், கடற்றொழில் மற்றும் கடலுணவுப் பொருட்கள், கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள், தகவல் தொழில்நுட்பச் சேவைகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, இயற்கை நலவாழ்வுப் பொருட்கள், சுகாதார உபகரணங்கள், சுற்றுலா, மரபுரிமை மற்றும் பண்பாட்டுத் துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இம்மாநாட்டில் முக்கியத்துவம் பெறவுள்ளன.

இத்துறைகளைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் தமது பொருட்களையும் சேவைகளையும் அறிமுகப்படுத்துவதற்கும், புதிய சந்தைகளைக் கண்டறிவதற்கும், வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும் மாநாடு வழிவகுக்கும். குறிப்பாக, இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டுச் சந்தைகளையும், ஐக்கிய இராச்சியம், கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள புலம்பெயர் வர்த்தக வலையமைப்புகளையும் பயன்படுத்தி, வடக்கு மாகாண உற்பத்தியாளர்களுக்குப் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இம்மாநாட்டின் ஊடாக 50க்கும் மேற்பட்ட நேரடி வர்த்தகச் சந்திப்புகளை ஏற்பாடு செய்வது இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் உற்பத்தியாளர்கள் தமது பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பில் வெளிநாட்டுக் கொள்வனவாளர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடவும், புதிய விற்பனைத் தொடர்புகளை ஏற்படுத்தவும், முதலீடுகளை ஈர்க்கவும் வாய்ப்பு கிடைக்கும். அத்துடன், வணிக விரிவாக்கத்துக்குத் தேவையான நிதி உதவிகள் மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டல்களைப் பெற்றுக்கொள்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.

ஏற்றுமதிக்கான சர்வதேசச் சந்தை நிலவரங்கள், வெளிநாட்டு வர்த்தக விதிமுறைகள், தரச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான வழிமுறைகள், ஏற்றுமதிக்கான நிதி மற்றும் காப்புறுதி, பொருட்களைக் குறித்த காலத்தில் பாதுகாப்பாகச் சந்தைகளுக்குக் கொண்டு சேர்ப்பதற்கான போக்குவரத்து மற்றும் விநியோக ஏற்பாடுகள் தொடர்பிலும் உற்பத்தியாளர்களுக்கு வழிகாட்டல்கள் வழங்கப்படவுள்ளன. இதன் மூலம் உள்ளூர் உற்பத்தியாளர்கள் தமது பொருட்களின் தரத்தை மேம்படுத்தி, ஏற்றுமதிக்குத் தயாராகும் வாய்ப்பைப் பெறுவர்.

இரண்டு நாள்கள் நடைபெறவுள்ள இம்மாநாட்டின் முதல் நாளில் சந்தை வாய்ப்புகள் தொடர்பான அமர்வுகளும், சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான அறிமுகங்களும் இடம்பெறவுள்ளன. இரு நாள்களிலும் வர்த்தகக் கண்காட்சிகளும் நேரடி வர்த்தகச் சந்திப்புகளும் நடைபெறவுள்ளதுடன், இரண்டாம் நாளில் வர்த்தகப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கைச்சாத்திடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இம்முயற்சி வெறுமனே ஒரு கண்காட்சியுடன் மட்டுப்படுத்தப்படாமல், வடக்கு மாகாணத்தின் உற்பத்தித் திறனை உயர்த்தவும், ஏற்றுமதித் துறையை விரிவுபடுத்தவும், பிராந்தியத்தில் புதிய முதலீடுகளை ஈர்க்கவும் உதவும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ளது. நீண்டகாலத்தில் நிரந்தரக் கண்காட்சி மற்றும் வர்த்தகத் தளமொன்றை உருவாக்குவதற்கான வாய்ப்புகளையும் இந்த முயற்சி முன்னிலைப்படுத்துகிறது என இன்றைய கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டது.

விசேட கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் இலங்கை முகாமைத்துவக் கழகத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Exploring the possibilities for reactivating the “Thikkam Distillery”, a decision was made to prepare plans for its reactivation as an Export oriented Production Centre, and to seek legal validation from the Attorney General’s Department regarding the agreement entered between the Palmyrah Development Board and a Private Institution.

A discussion regarding the reactivation of “Thikkam Distillery” was held today (13.10.2026) at the Governor’s Secretariat, co-chaired by Hon. R. Chandrasekar/ Minister of Fisheries, Aquatic and Ocean Resources, Hon. N. Vethanayahan/ Governor of Northern Province and Hon. Suntharalingam Pratheep/ Deputy Minister of Plantation and Community Infrastructure.

The discussion examined the legal issues concerning the 25-year agreement entered into between the Palmyrah Development Board and a Private Institution in 2022. The Minister, Deputy Minister and Governor emphasized the necessity of removing obstacles to reactivate the Distillery by reviewing the agreement’s legal validation.

The discussion focused on securing the Distillery’s permit under their custody and pursuing export-oriented production with the participation of Private Investors. Representatives of Vadamardchi Palmyrah & Coconut Development Cooperative Society also extended their support.

At the end of the discussion, participants agreed to seek legal counsel from the Attorney General’s Department and to prepare export oriented production plans by reactivating the Distillery soon.

Hon. J. Rajeevan/ Member of Parliament, Provincial and District Officials and Representatives of Palmyra Development Board and Cooperative Societies participated in the discussion.

The first official meeting of the Trust Fund Board established with cabinet approval to carry out its future activities under proper administration as planned, was held today (10.10.2026), Saturday morning at the Jaffna Thiruvalluvar Cultural Centre.

Members of the Trust Fund Board have signed the documents marking the establishment on 18th on last September. Accordingly, the board held its first meeting today.

The ex-officio members, Hon. Governor of Northern Province, N. Vethanayahan, Hon. Mayor of Municipal Council, Mathivathani Vivekannatharasa and the Commissioner of Municipal Council, D. C Aravintharajah attended the meeting in person. Another ex-officio member, the Secretary of the Ministry of Buddha Sasana, Religious and Cultural Affairs attended the meeting online.

Meanwhile, the sectorial members, Mrs. Santhini Sivanesan/ Arts and Culture, Kanapathipillai Prabaharan/ Legal, Rathnavelupillai Mayoorathanathan/ Commerce and Kosalai Mathan/ Education also attended the meeting.

At the meeting, the board discussed several matters in detail, including procedures for administering the Jaffna Cultural Centre in the future and activities to be carried forward in accordance with the Trust Fund Board’s documents.

Further, the Board members received an explanation of the architecture and features of the Thiruvalluvar Cultural Centre, and subsequently visited several parts of the Centre.

Further, the Board members were given an explanation of the architecture and features of the Thiruvalluvar Cultural Centre, and subsequently visited several parts of the Cultural Centre.

As requested by the people of Kanjiramoddai, located on the border of Vavuniya District, Hon. M. Jegatheeswaran, Member of Parliament for Vanni District, along with the Hon. N. Vethanayahan, Governor of Northern Province personally inspected the development works today (09.10.2026).

In respect of the request made during the field visit last year, temporary renovation works of Maruthodai – Kaddupoovarasankulam road has been completed, and subsequent to this, bridge construction is now underway at a cost of Rs. 10 million. The governor directed to complete the works before the rainy season.

While inspecting the three irrigation wells, elephant fencing for the houses and agriculture development assistance, the governor commended the beneficiaries for enhancing their livelihoods using the assistance provided.

During the discussion with the people, he inquired about the housing schemes, health services, land issues, rehabilitation of tanks, and irrigation facilities. Specially, it focused on the possibilities of expanding paddy cultivation up to 420 acres by rehabilitating the Periyamaruthodai tank. He also reviewed the request for rehabilitating Erukkalam and Kanjiramoddai tanks and channel.

“My expectation is that the people of this village should create a sustainable life on their own lands by improving their livelihood”, the governor stated. He also commended the dedicated work of the officials of Agricultural Department.

Officials from Provincial and District departments, as well as Divisional and Education officials participated in the field visit.

(தமிழ் மற்றும் சிங்கள சுற்றறிக்கைகள், விண்ணப்பப் படிவங்கள் கீழே உள்ளன.)
(දෙමළ සහ සිංහල චක්‍රලේඛ සහ අයදුම්පත් පහතින් ඇත)
(Tamil & Sinhala Circulars and Applications are available below)
Published on: 12.10.2026
Closing Date: 2026/10/30
Circular(30-2026): Tamil (Mobile Users – click here)

Application-Tamil:(Mobile Users click here )

Circular(26-2026): Sinhala(Mobile Users – click here)

Application – Sinhala:(Mobile Users click here )

(தமிழ் மற்றும் சிங்கள சுற்றறிக்கைகள், விண்ணப்பப் படிவங்கள் கீழே உள்ளன.)
(දෙමළ සහ සිංහල චක්‍රලේඛ සහ අයදුම්පත් පහතින් ඇත)
(Tamil & Sinhala Circulars and Applications are available below)
Published on: 12.10.2026
Closing Date: 2026/10/30
Circular(30-2026): Tamil (Mobile Users – click here)

Application-Tamil:(Mobile Users click here )

Circular(26-2026): Sinhala(Mobile Users – click here)

Application – Sinhala:(Mobile Users click here )