முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மிக வறிய மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கான உலர் உணவு விநியோகம்

சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலைய நிறைவேற்றுப் பணிப்பாளரது கோரிக்கைக்கு அமைவாக, COVID 19 உலகளாவிய தொற்றுக் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்வாதாரதத்தை இழந்த மிக வறிய நிலையிலுள்ள மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி. வனஜா செல்வரட்ணம் அவர்களின் பணிப்பிற்கமைவாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர்களூடாகத் தெரிவு செய்யப்பட்ட 550 குடும்பங்களுக்கு சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தினால் ரூபா. 3,000 பெறுமதியான 550 உலர் உணவுப் பொதிகள் 2020.05.09 ஆந் திகதி தொடக்கம் 2020.05.18 ஆந் திகதி வரை வழங்கப்பட்டன.

அந்த வகையில், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள அனைத்துப் பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த 550 மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு (550 உலர் உணவுப் பொதிகள்) அந்தந்தப் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர்களூடாக இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.