‘இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு Clean Voyage of Unity “ – A Special Programme to promote the Clean Sri Lanka concept in the Jaffna District Northern Province (13th to 20th August 2025).

Clean Sri Lanka நிகழ்ச்சித் திட்டத்தை யாழ். மாவட்டத்தில் ஊக்குவிக்கும் நோக்கில் ‘இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு Clean Voyage of Unity’ எனும் எண்ணக்கருவினைக் கொண்டு விசேட நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடாத்தப்பட வுள்ளது.

இக்காலப்பகுதியில்.

  • Clean Sri Lanka நடமாடும் சேவை.
  • Clean Sri Lanka எண்ணக்கரு தொடர்பான நிகழ்ச்சித் திட்டம்.
  • சமூக ஒழுக்கவியல் பெறுமதிகளை சமூக மட்டத்தில் ஊக்குவிக்கும் நிகழ்ச்சித்திட்டம்.

ஆகியன இடம்பெறவுள்ளன.

இந் நிகழ்வுகளை யாழ். மாவட்டச் செயலகம்,  வடக்கு மாகாண சபை, Clean Sri Lanka செயலகம் ஆகியன இணைந்து செயற்படுத்த உள்ளன. அந்த வகையில் Clean Sri Lanka நடமாடும் சேவையானது 14 ஆகஸ்ட் 2025 திகதியன்று பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிலும் 15 ஆகஸ்ட் 2025 ஆம் திகதி உடுவில் பிரதேச செயலர் பிரிவிலும் இடம்பெறவுள்ளது. குறித்த நடமாடும் சேவையில் தாங்கள் கலந்துகொண்டு பயன்பெற முடியும் என்பதை தங்களிற்கு அறியத்தருகின்றோம்.

பிரதம செயலாளர் செயலகம்
வடக்கு மாகாண சபை.