October 29, 2026

61 agro seeds eng

விவசாயிகளாகிய உங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக நாம் விவசாய உள்ளீடுகளையும் உபகரணங்களையும் வழங்குகின்றோம். அதற்குப் பதிலாக, எமது மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான (GDP) பங்களிப்பை உயர்த்துவதற்கு நீங்களும் உதவ வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்தார். வடக்கு மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ், வவுனியா மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய உள்ளீடுகள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வு இன்று (28.10.2026) புதன்கிழமை வவுனியா […]

61 agro seeds eng Read More »

60 housing eng

வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத் திட்டத்தின் கீழ், வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபைப் பகுதியில் அமைக்கப்பட்ட வீட்டை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று (28.10.2026) புதன்கிழமை திறந்து வைத்ததுடன், அப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஏனைய அபிவிருத்திப் பணிகளையும் நேரில் பார்வையிட்டார். குறித்த பிரதேச சபைக்கு இத்திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் இரண்டு வீடுகளும், இரண்டாம் கட்டத்தின் கீழ் ஒரு வீடும் வழங்கப்பட்டுள்ளன. முதலாம் கட்டத்தின் கீழ் 18 இலட்சம்

60 housing eng Read More »

59 aero club eng

கல்வி என்பது மாணவர்களை ஏற்கெனவே அறிந்த பாதைகளில் மட்டுமே பயணிக்கச் செய்வதல்ல, அவர்கள் செல்லக்கூடிய புதிய பாதைகளையும் அறிமுகப்படுத்துவதாகும். அந்த வகையில், விமானப் போக்குவரத்துத் துறை சார்ந்த அறிவையும் தொழில் வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வவுனியா இரம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய தேசியப் பாடசாலையின் செஞ்சிறகுகள் விமானவியல் கழகத்தின் (Red Wings Aeronautical Society) ஏற்பாட்டில் நடைபெற்ற விமானவியல் தின விழா –

59 aero club eng Read More »

58 cinema eng

ஈழத் தமிழ்த் திரைத்துறைக்கு ஒரு புதிய சந்தையை உருவாக்கி, உள்ளூர் கலைஞர்களின் படைப்புகள் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களைச் சென்றடைவதற்கும், அவர்களின் உழைப்புக்கு உரிய மதிப்பும் வருமானமும் கிடைப்பதற்கும் கரும்பறவை (Blackbird OTT) தளம் வழிவகுக்க வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ஈழத் தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கரும்பறவை ஓடிடி தளத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (27.10.2026) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் நாச்சிமார்கோவிலடியில் அமைந்துள்ள ராஜா கிறீம் ஹவுஸ் சரஸ்வதி

58 cinema eng Read More »