மன்னார் மாவட்டத்தில் குளங்கள் கிராமங்களின் மறுமலர்ச்சி (CRIWMP)திட்ட அமுலாக்கல் தொடர்பான கூட்டம்

குளங்கள் கிராமங்களின் மறுமலர்ச்சி திட்ட அமுலாக்கல்(CRIWMP) கூட்டமானது வடமாகாண விவசாயப் பணிப்பாளர் தலைமையில் 23.06.2020 ஆம் திகதி மன்னார் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் மற்றும் இத் திட்டத்துடன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள், திரு.பத்மசீறி சுபசிங்க (கள இணைப்பாளர், UNDP), திரு. ஜெனிங்ஸ் (மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
CRIWMP), திரு.றசிக்க (சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர், PALM நிறுவனம்), திரு. அன்வர் (மாவட்ட ஒருங்கிணைப்பாளர், PALM நிறுவனம்) ஆகியோர் கலந்துகொண்டனர். வடக்கு மாகாணத்தில் வவுனியா மாவட்டத்தில் முதலில் ஆரம்பிக்கப்பட்ட இத் திட்டம் இவ் வருடம் மன்னார் மாவட்டத்திற்கும் விரிவாக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சின்னகுஞ்சுகுளம் குளத்தொகுதி இத் திட்டத்தில் இணைக்கப்பட்டு ஆரம்ப கட்டமாக மாதா கிராமத்தை சேர்ந்த 287 குடும்பங்களுக்கு சிறுபோகத்தில் 100 ஏக்கரில் சிறுதானிய பயிர்செய்கை மேற்கொள்வதற்கு 1.2 மில்லியன் ரூபா செலவில் நிலக்கடலை, பயறு மற்றும் கௌபி விதைகள் உள்ளீடாக வழங்கப்பட்டது.

2020 பெரும் போகத்தில் CRIWMP திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துடையாடல் நடாத்துப்பட்டது. இத் திட்டத்தின் அறிமுகம், நோக்கம், எதிர்கால செயற்பாடுகள் பற்றிய விளக்கங்களினை பொறியியலாளர் திரு.ஜெனிங்ஸ் மற்றும் UNDP யின் கள ஒருங்கிணைப்பாளர் திரு. சுபசிங்க ஆகியோர் கூறினர். வழங்கப்பட்ட பயிற்சி வகுப்புக்கள் மற்றும் எதிர்காலத்தில் இத்திட்டத்தினூடக விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய தொழினுட்பங்கள் தொடர்பாகப் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.சுகூர் அவர்களால் கூறப்பட்டு பின் குஞ்சுகுளம் பகுதிக்கு கள விஐயம் மேற்கொள்ளப்பட்டது.

No Deposit Bonus Casinos in the USA for 2023 [Check #4]