தற்போது பெய்து வரும் மழையினால் பயிர்ச்செய்கையில் ஏற்படும் பாதிப்புக்களும் இப்பாதிப்பை குறைப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளும்

யாழ் மாவட்டத்தில் விவசாயிகள் கடந்தகால சிறு போகங்களிலும் பார்க்க கூடியளவான விஸ்தீரணத்தில் வயல்நிலங்களில் வெங்காயம், பயறு, கௌபீ, கச்சான் குரக்கன் போன்ற மறுவயற்பயிர்ச் செய்கையில் தற்போது ஈடுபபட்டு வருகின்றார்கள். கடந்த மூன்று நாட்களாக கிடைக்கப்பெற்ற 104.4 மில்லிலீற்றர் மழை காரணமாக வயல் நிலங்களில் மேற்கொள்ளப்பட்ட பயிர்செய்கையில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. இக்கால நிலை தொடர்ந்தும் நீடிக்ககூடிய சாத்தியங்கள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

1800 கெக்ரேயர் விஸ்தீரணத்தில் வெங்காய செய்கையும்;, 230 கெக்ரேயர் விஸ்தீரணத்தில் மிளகாய் செய்கையும் 170 கெக்ரேயர் விஸ்தீரணத்தில் பயறு செய்கையும் 158 கெக்ரேயர் விஸ்தீரணத்தில குரக்கன் செய்கையும் 134 கெக்ரேயர் விஸ்தீரணத்தில் கச்சான் செய்கையும் ஏனைய பயிர்கள் உட்பட 3005 கெக்ரேயர் விஸ்தீரணத்தில் பயிர்ச்செய்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்செய்கையில் ஏற்பட்ட பாதிப்பால் பொருளாதாரரீதியல் இழப்பு ஏற்படும்.

வளிமண்டலத்தில் கூடியளவு சாரீரப்பதன், நீர் தேங்கி நிற்றல், மற்றும் கூடியளவு வெப்பநிலை காரணமாகவும் அதிகளவு நைதரசன் பசளைப்பாவனை காரணமாகவும் மறுவயற் பயிர்களில் நோய் ஏற்படுகின்றது.

 

வெங்காய பயிர்ச்செய்கையில் ஏற்படும் நோய் தாக்கம்

தற்போது கிடைக்கப்பெற்ற மழை காரணமாக வெங்காயப் பயிர்களில் பங்கசு மற்றும் பற்றீரியா போன்ற நுண்ணங்கிகளால் குமிழ் அழுகல், அந்திரக்நொஸ், கீழ் பூஞ்சணம் மற்றும் ஊதா புள்ளி நோய் என்பவற்றின் தாக்கம் ஏற்பட்டள்ளதை அவதானிக்க முடிகின்றது.

1. குமிழ் அழுகல் நோயை அடையாளம் காணல்

முதலில் இலைகள் முழுவதும்; மஞ்சள் நிறமாக மாறிப் பின் மெதுவாகக் காய ஆரம்பிக்கும். இலைகள் மேலிருந்து கீழ் நோக்கி காயும். வெங்காயத் தாள் முழுவதும் வாடும். வெங்காயக் குமிழ், வேர்கள் அழுகும். வெள்ளை நிறப் பூஞ்சண வளர்ச்சி இதன் மேல் தோன்றும்.

2. அந்திரக்நொஸ் நோயை அடையாளம் காணல்
ஆரம்பத்தில் கண் வடிவமுடைய மஞ்சள் நிற ஈரலிப்பான புள்ளிகள் தோன்றி பின் படிப்படியாக இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். நோய் அதிகரிக்கும் போது இலைகள் முறுகிய தோற்றத்தில் காணப்பட்டுப் பின்பு மஞ்சள் நிறமாகி முற்றாக இறக்கும். தோட்டத்தைப் பார்க்கும்போது தொட்டம் தொட்டமாக இறந்து காணப்படுவதை அவதானிக்கலாம். குமிழ்கள் அழுகிக் காணப்படுவதையும் அவதானிக்க முடியும்.

3. கீழ் பூஞ்சணம் நோயை அடையாளம் காணல்
ஆரம்பத்தில் சாம்பல் கலந்த வெள்ளை நிற வளர்ச்சி இலையின் மேற்புறத்தில் காணப்படும். பின்பு மண்ணிறம் அல்லது ஊதா நிறமாக மாறி இலைகள் காய்ந்து இறந்துவிடும். இலையின் பூந்துணரிலும் வெங்காயம் சேமிக்கும் போதும் ஈரலிப்பான அழுகல் தன்மை காணப்படும்.

4. ஊதா புள்ளி நோய் நோயை அடையாளம் காணல்
வெங்காய இலைகளின் மேற்புறத்தில் இந்நோய் ஏற்படும். முதலில் ஊதா நிற நுண்ணிய புள்ளிகள் தோன்றும். பின் ஒழுங்கற்ற வடிவில் பெருத்துச்செல்லும். இலையின் அடிப்புறத்திலிருந்து மேல் நோக்கிப் புள்ளிகள் உருவாகும். இந்தப் புள்ளிகள் ஒன்றிணைந்து இலைப்பரப்பு முழுவதும் பரவி கருகிப்பின் இறக்கும். சாம்பிராணிக் குச்சி எரிவது போன்ற தோற்றம் காணப்படும்.

பயறு, கௌபீ மற்றும் கச்சான் பயிர்ச்செய்கையில் நோய் தாக்கம்

அவரையின பயிர்களில் கழுத்தழுகல், தூள்பூஞ்சணம், பைற்றோப்தரா வெளிறல், அந்திரக்நொஸ், துருநோய் மற்றும் இலைப்புள்ளி நோய் என்பவற்றின் தாக்கம் ஏற்பட்டள்ளதை அவதானிக்க முடிகின்றது.

1. கழுத்தழுகல் நோயை அடையாளம் காணல்
முதிர் இலைகளின் விளிம்புகள் மஞ்சள் கலந்த பச்சையாக காணப்படும். பின்பு இலைகள் முழுவதும் வாடி காணப்படும். மண்ணுடன் தொடர்புடைய தண்டு பகுதி சிதையடைந்து வெள்ளை நிற பூஞ்சண இழைகள் காணப்படும். அதிக எண்ணிக்கையான பழுப்பு நிறத்தில் இருந்து கபில நிறமுடைய கோள உருவான கடுகு அளவுடைய வித்திகள் காணப்படும். தண்டு , வேர்ப்பகுதி என முழுப்பயிரும் இறந்து காணப்படும்.

2. துரு நோயை அடையாளம் காணல்
இலைகளின் மேற்புறத்தில் சிறிய மஞ்சள் நிற புள்ளிகள் காணப்படும். முதிர்ந்த இலைகளின் கீழ்புறத்தில் கபில நிற திட்டுகள் காணப்படும். நோயின் தாக்கம் அதிகரிக்கும் போது இத்திட்டுகள் துருநிறமாக மாறி இலைகள் காய்ந்து உதிரும்.

குரக்கன் மற்றும் ஏனைய சிறுதானிய செய்கையில் ஏற்படும் நோய்த்தாக்கங்கள்

சிறு தானிய பயிர்களில் மடல் வெளிறல் நோய் மற்றும் எரிபந்த நோய் என்பவற்றின் தாக்கம்
ஏற்பட்டள்ளதை அவதானிக்க முடிகின்றது.

1. மடல் வெளிறல் நோயை அடையாளம் காணல்
இலைகளின் உள்ளும் இலைமடலினுள்ளும் ஒழுங்கற்ற பச்சை கலந்த நரை நிற புள்ளிகள் தோன்றும். ஈரலிப்பான சூழ்நிலையில் கபில நிற கடுகு போன்ற பூஞ்சணம் உறங்குவித்தி அமைப்பு காணப்படும். இலை விளிம்புகளில் சாம்பல் நிறகாயங்கள் காணப்படும். பின்பு இலைகள் இறந்தது போன்ற கோற்றம் ஏற்படும்

2. எரிபந்த நோயை அடையாளம் காணல்
கண் போன்ற புள்ளிகள் காணப்படும். புள்ளியின் நடுப்பகுதியில் நரை நிறமாகவும் ஓரங்களில் சிவப்புக்கலந்த கபில நிறமாகக் காணப்படும். கதிர் வரும்போது இறந்த மற்றும் கறுப்பு நிறமான கணுவிடை காணப்படும். இது பின்னர் முறிந்து காணப்படும்.

விவசாயிகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்
1. நீர் வடிப்பை ஏற்படுத்தல்
நீர்வடிந்தோடும் திசையில் கால்வாய்களை ஏற்படுத்தி நீரை வடிந்தோட செய்வதுடன் மேலதிக நீரையும் அகற்றல்


2. நைதரசன் பசளைப் பாவனையை குறைத்தல்
3. அசேதன திரவ பசளை விசிறலை தவிர்த்தல்
4. பாதிக்கப்பட்ட அல்லது தொற்று ஏற்பட்ட பகுதிகளை அழித்தல்
5. பங்கசு நாசினியுடன் ஒட்டுமருந்தை சேர்த்து விசிறுதல்
6. மழையின் பின் மேற்கொள்ளப்படும் நீர்ப்பாசன இடைவெளியை அதிகரித்தல்
7. தொற்று ஏற்பட்ட பகுதிகளின் ஊடாக ஏனைய பகுதிகளிற்கு நீர்ப்பாசனம் மேற்கொள்வதை தடுத்தல்
8. அறுவடை செய்யப்பட்ட விளை பொருட்களை பனையோலையிலோ அல்லது சாக்கு படங்கிலோ உலர வைத்தல்


9. சிபார்சு செய்யப்பட்ட பங்கசு நாசினிகளை விசிறுதல்
10. உலர்ந்த மணலில் பரவிக் குமிழ்களை உலரவிடல்
11. பயிர்ச்செய்கை நிலத்தில் உயரமான பகுதிகளில் அறுவடைசெய்த குமிழ்களைப் பரவி நீர் வடிய விடல்
12. ஒளிச்செறிவான மின்குமிழைப்பயன்படுத்தி உலரவிடல்(குழஉரள டுiபாவ மூலம்)
13. தேவையேற்படின் பாதிப்புக்கூடிய இடங்களிற்கு மட்டும் ரொப்சின்ஃஹோமாய் பங்கசு நாசினியை 10அ2 விஸ்தீரணத்திற்கு 70கிராம் 50 லீற்றர் நீர் என்ற விகிதத்தில் கலந்து விசிறுவதன் மூலம் மண்ணைப்பரிகரிப்புச் செய்து கட்டுப்படுத்தலாம்

சிபார்சு செய்யப்பட்ட பங்கசு நாசினிகள்

பயிர் நோய்தாக்கம் பங்கசு நாசினியின் இரசாயனப்  பெயர் பாவனை அளவு  10 லீற்றர் நீரில் கலந்து விசிறல்
வெங்காயம்

 

முற்காப்பு நடவடிக்கைக்காக

 

குளோரோ  தலனில் (Chlorothalanil 500g/L SC) 30 மி.லீ
அசற்றோ சோபின் 120g/ ரெபுயுகொனசோல்  கஸ்ரொடியா 200g Azoxystrobin 120 g/l + Tebuconazole 200 gr.Custidoa 10 மி.லீ
குமிழ் அழுகல் / அந்திரக்நோஸ்

 

 

கோமாய் (Thiophanate methyl 50% WP
+ Thiram 30%WP (Homai)
20 கிராம்
ரொப்சின் (Thiophanate methyl 70% WP) 14 கிராம்
wp மெற்றிராம் 55% + பைராகுலொஸ்ரோபின் 5% பவேர்ஸ் பைராகுலொஸ்ரோபின் / கப்ரியோ ரொப் (Metiram 55% + Pyraclostrobin 5% WG Baurs Pyraclostrobin / Cabrio Top ) 20 கிராம்
ரிஸ்கா புளுசினாம் நண்டோ (Fluzinam 500g/L SC)      Tizca Fluzinam , Nando

 

10 மி.லீ
அசோசிஸ்ரொபின்  120g/L + ரெபியுகொனசோல்; 200g கஸ்ரிடோவா (Azoxystrobin 120g/ l+ Tebuconazole200gr) Custidoa 10 மி.லீ
ரெபியுகொனசோல்    500gr/Kg + றைபுளொக்சிஸ்ரோபின் 205g/Kg நற்றிவோ (Tebuconazole500gr/kg+Trifloxystrobin 205g/kg  WG   Nativo 9.6 கிராம்
 

கீழ் பூஞ்சணம்

 

மங்கோசெப்    64% + மெற்றாலக்சில; 18% WP(Mancozeb 64% + Metalaxyl8% WP) 12.5.gr./10 lt. water
மெற்றிராம்    55% + பைராகுலொஸ்ரொபின் 5% கப்ரியோ ரொப; (Metiram 55% + Pyraclostrobin 5% WG)-  Baurs Pyraclostrobin / Cabrio Top 20gr./10 lt. water

 

அசொசிஸ்ரொபின் 250g/l SC – அம்ஸரார் (Azoxystrobin 250g/l Sc  –  Amistar) 10ml./10 lt. water

 

 

அவரையினம் (பயறு, கௌபீ, நிலக்கடலை)

கழுத்தழுகல்

 

கோமாய் (Thiophanate methyl 50% WP
+ Thiram 30%WP (Homai)
20g
 

துரு நோய்

 

ரொப்சின; (Thiophanate methyl 70% WP) 14g
ரெபியுகொனசோல் 250 g/l EW( Tebuconazole 250g/l EW 6ml
மங்கோசெப் 75% WG (Mancozb 75% WG) 20g
குளோரோதலனில்    500g/l SC (Chlorohalonil 500g/l SC) 30ml
 

குரக்கன் மற்றும் சிறுதானியம்

 

மடல் வெளிறல்

ரொப்சின; (Thiophanate methyl 70% WP) 14g
ரெபியுகொனசோல்    250 g/l EW( Tebuconazole 250g/l EW 6ml
 

எரிபந்தம்

ரெபியுகொனசோல்  250 g/l EW( Tebuconazole 250g/l EW 6ml
காபென்டசிம்   50% WG (Carbendazim 50% WG) 7g
ஐசோபுறோதியோலேன் 400g/l EC (Isoprothiolane 400g/l EC) 12.5ml

ஆக்கம். திருமதி. அ.சிறிரங்கன் ,
பிரதி மாகாண விவசாய பணிப்பாளர்,
யாழ்ப்பாணம்