வெற்றிகரமான மிளகு செய்கையாளருடன் அனுபவ பகிர்வு

வவுனியா மாவட்டத்தில் தவசிக்குளம் எனும் முகவரியில் மிளகு செய்கை மேற்கொள்ளும் திரு.ரங்கசாமி கோவிந்தசாமி என்ற விவசாயி வெற்றிகரமான மிளகு செய்கை தொடர்பான தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

1977ஆம் ஆண்டிலிருந்து வவுனியா மாவட்டத்தில் வசிக்கும் இவ் விவசாயி அதற்கு முன்னர் கண்டி மாவட்டத்தில் மிளகு, கோப்பி, கொக்கோபயிர் செய்கை மேற்கொண்ட அனுபவத்துடன் தென்னம் தோட்டத்தில் ஊடுபயிராக மிளகு செய்கையை மேற்கொண்டு வருவதாக கூறினார்.
30 வருட வயதுடைய தென்னைச் செய்கையினுள் சீமைக்கிழுவை நடுகை செய்து அதில் ஏறிகளாக மிளகு கொடியை படரவிட்டு செய்கை பண்ணப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு நடுகை செய்யப்பட்ட 20 மிளகு கொடிகள் தற்போது வரை உற்பத்தி தரும் நிலையில் காணப்படுகின்றன.

நடுகைக்குழி தயாரிப்பு :-

ஒரு அடி நீளம் அகலம், ஆழம், உடைய நடுகைக்குழியை வெட்டியதாக கூறினார். அதற்குள் மேல்மண், கூட்டெருவினை சரிபங்காக கலந்து நடுகைக்குழிக்கு மேலாக குவியலாக இட்டு 14 நாட்கள் கூட்டெரு மண்ணுடன் கலந்து உக்கலடையவிட்டு பின்னர் மிளகு நாற்றுகளை நடுகை செய்ததாக கூறினார்.

பயிர் பராமரிப்பு:-
ஒவ்வொரு வருடமும் ஜப்பசி, கார்த்திகை மாதங்களில் இரு தென்னைகளுக்கு இடையில் கான் வெட்டி சீமைக்கிழுவை இலைகளை அதனுள் இட்டு மூடி விடுகின்றார். இதன் மூலம் மிளகு கொடிகளுக்கு சேதனப்பசளை கிடைப்பதாக கூறினார். வாரத்திற்கு இருதடவை பாத்தி முறை நீர்ப்பாசனம் செய்து வருகின்றார்.

அறுவடை:-
அவரது தோட்டத்தில் உள்ள மிளகு கொடிகள் நடுகை செய்ததிலிருந்து ஒரு வருடத்தில் காய்க்க தொடங்கியதுடன் அதிலிருந்து அறுவடையும் பெற்றுள்ளார். வருடத்திற்கு இரு போகங்களும் காய்ப்பதாகவும் சிறுபோகத்தில் காய்க்கும் வீதம் குறைவு எனவும் காலபோகத்தில் காய்க்கும் வீதம் அதிகம் எனவும் அவரால் தெரிவிக்கப்பட்டது.

அறுவடையும் பதப்படுத்தலும்:-

🏆 Top High RTP Casinos Online (with High Payout Games) 2023 💳

காலபோகத்தில் ஜப்பசி, கார்த்திகை மாதங்களில் மிளகுக்கொடி பூக்கும் பூத்ததிலிருந்து 8 மாதத்தில் அறுவடையை பெறுவதாக கூறினார். மிளகின் பழக்காம்பில் இடையிடையே சிவப்பு நிறபழங்கள் தோன்றும் பொழுது அறுவடை செய்கின்றார்.

அறுவடை செய்த மிளகினை நிலத்தில் விரிக்கப்பட்ட படங்கில் போட்டு மூடி காலால் மிதிப்பதன் மூலம் பச்சை மிளகினை பழக்காம்பிலிருந்து தனித்தனியாக வேறாக்குகின்றார்.
பிரித்தெடுத்த மிளகினை சூரிய ஒளியில் உலர்த்தி சூரிய ஒளியில் காயவைத்த வெப்பத்துடன் சாக்கினுள் இட்டு இறுக்கமாக கட்டி 3 நாட்கள் வைப்பதாக கூறினார்.

மூன்றாம் நாள் சிவப்பு, பச்சை நிறம் கலந்த மிளகுகள் அனைத்தும் கறுப்பு நிறமாகமாறும். அம்மிளகினை 5-6 நாட்கள் நன்கு வெயிலில் உலர்த்தி கறுப்பு மிளகினை பெறுகின்றார்
5 கிலோ கிராம் பச்சை மிளகிலிருந்து 3 கிலோ கிராம் கறுப்பு மிளகினை பெறுவதாக கூறினார்.

வருமான மதிப்பீடு:-

ஒரு மிளகு கொடியிலிருந்து பெறப்படும் அறுவடை(பச்சைமிளகு)                          – 5 கி.கி
5 கி.கி பச்சை மிளகினை பதப்படுத்தி பெறப்படும் கறுப்பு மிளகின் அளவு        – 3 கி.கி
20 மிளகுக்கொடியிலிருந்துபெறப்படும் பதப்படுத்தியகறுப்புமிளகின் அளவு  – 60 கி.கி
வீட்டுத்தேவைக்காக பயன்படுத்தும் மிளகின் அளவு                                                       – 2 கி.கி

1 கி.கி கறுப்பு மிளகின் விலை                                                                                            – ரூபா 800.00
ஃ 58 கி.கி கறுப்பு மிளகினை விற்பதன் மூலம் பெறப்படும் வருமானம்      – ரூபா 46,400.00

திரு.ரங்கசாமி கோவிந்தசாமி அவர்கள் தனது அனுபவத்தில் மிளகு செய்கையானது மிகக்குறைந்த கூலியாள் தேவையுடன் நோய் பீடை தாக்கங்கள் எதுவுமின்றி இலகுவான பயிர் செய்கை நடவடிக்கைகளுடன் இலாபகரமாக எல்லோராலும் செய்கை பண்ண முடியும் என தெரிவித்தார்.