சிறந்த விவசாயிகள் கௌரவிப்பு நிகழ்வு – 2020

வடமாகாண விவசாயத் திணைக்களத்தினால் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் சிறந்த விவசாயிகளைத் தெரிவு செய்து கௌரவிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் ஓர் அங்கமாக கிளிநொச்சி பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தினரால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் சிறந்த விவசாயிகள் கௌரவிப்பில் 2019 ஆம் ஆண்டிற்கான நிகழ்வானது பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன் அவர்களின் தலைமையில் 21.01.2020 ஆம் திகதி A9 வீதியில் அமைந்துள்ள கூட்டுறவு கலாசார மண்டபத்தில் நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் முருகேசு சந்திரகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். இவருடன் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஐ.மோகன்றாஜ், பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் மேலதிக பணிப்பாளர் (ஆராய்ச்சி) கலாநிதி எஸ்.ஜே.அரசகேசரி அவர்களும், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் அவர்களும் கிளிநொச்சி மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலீசியன் மற்றும் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் அ.செல்வராசா அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இவர்களுடன் பரந்தன் விவசாயப் பாடசாலை அதிபர் பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி.செ.சுகந்தி அவர்களும், பரந்தன் நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதி விவசாயப் பணிப்பாளர் எஸ்.சிவநேசன், பரந்தன் விதைகள் ஆய்வுகூடத்தின் உதவி விவசாயப் பணிப்பாளர் சா.செல்வக்குமார் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் ஜனாப்.எஸ்.எம்.சுபைர் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். இவர்களுடன் விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் வெற்றி பெற்ற விவசாயிகள் முதலானோர் கலந்து கொண்டார்கள்.

இக் கௌரவிப்பு நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சிறந்த வீட்டுத் தோட்டச் செய்கையாளர்கள் மற்றும் சிறந்த சேதன விவசாயச் செய்கையாளர்களும் மாகாண விவசாயத் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சிறந்த தேனீ வளர்ப்பாளர்கள் மற்றும் சொட்டு நீர்ப்பாசனத்துடனான சிறந்த வாழைச் செய்கையாளர்கள் என 04 தலைப்புக்களின் கீழ் மாவட்ட மட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக் கொண்ட 12 வெற்றியாளர்களிற்கும் வெற்றிக்கேடயங்கள், சான்றிதழ்கள் மற்றும் பணப்பரிசு என்பன வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள். பணப்பரிசாக முதல் மூன்று வெற்றியாளர்களிற்கும் முறையே ரூபா 15,000.00இ ரூபா 12,500.00, ரூபா 10,000.00 எனும் அடிப்படையில் காசோலைகள் வழங்கப்பட்டன.
விவசாயப் போதனாசிரியர் பிரிவு மட்டத்தில் வெற்றி பெற்ற 248 வெற்றியாளர்களும் சான்றிதழ், பயன்தரு மரக்கன்றுகள் மற்றும் விதைப் பைக்கற்றுக்கள் என்பன வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள். சான்றிதழ் பெறும் வெற்றியாளர் ஒருவருக்கு ரூபா 400.00 பெறுமதியுடைய 05 வகையான மரக்கன்றுகளும் மற்றும் ரூபா 265.00 பெறுமதியுடைய 07 வகையான விதைப் பைக்கற்றுக்களும் வழங்கப்பட்டன.

ஒவ்வோர் தலைப்புக்களின் கீழும் மாவட்ட மட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக் கொண்ட வெற்றியாளர்களின் விபரங்கள் கீழ் வருமாறு.

(1) சிறந்த வீட்டுத்தோட்டச் செய்கையாளர்

தொ.இல மாவட்ட நிலை வெற்றியாளரின் ழுழுப் பெயர் முகவரி
01 1ம் இடம்; திருமதி. ஞானமோகன் கோமதி 50  இந்தியன் வீட்டுத் திட்டம், தெளிகரை, பூநகரி
02 2ம் இடம் திரு. நடராசா சந்திரமோகன் 2ம் ஒழுங்கை, கட்டைக்காடு, பெரியகுளம்
03 3ம் இடம் திருமதி. பத்மநாதன் உதயராணி 218/17, பிரமந்தனாறு, புன்னைநீராவி,  தர்மபுரம்

 (2) சிறந்த சேதனச் செய்கையாளர்

தொ.இல மாவட்ட நிலை வெற்றியாளரின் ழுழுப் பெயர் முகவரி
01 1ம் இடம் திரு. இரவீந்திரன் நவீனன் கரணவாய் மத்தி, கரவெட்டி
02 2ம் இடம் திரு.புவனேஸ்வரராசா பிரசாந் அச்செழு வடக்கு, நீர்வேலி
03 3ம் இடம் திரு. லம்போதரன் கஜேந்திரா கச்சாய் தெற்கு, கொடிகாமம்

(3) சிறந்த தேனீ வளர்ப்பாளர்கள்

தொ.இல மாவட்ட நிலை வெற்றியாளரின் ழுழுப் பெயர் முகவரி
01 1ம் இடம் திரு. ஜெபதேசு துரைரட்ணம் கிளாலி
02 2ம் இடம் திரு. குலசேகரம் சந்திரசேகரம் முரசுமோட்டை
03 3ம் இடம் திரு சண்முகவேல் நடேசானந்தம் கனகாம்பிகைக்குளம்

 (4) சொட்டு நீர்ப்பாசனத்துடனான சிறந்த வாழைச் செய்கையாளர்கள்

தொ.இல மாவட்ட நிலை வெற்றியாளரின் ழுழுப் பெயர் முகவரி
01 1ம் இடம் திரு. ஐயாகு மோகனராஜா முழங்காவில்
02 2ம் இடம் திரு. சிவக்கொழுந்து சந்திரேஸ்வரன் திருவையாறு
03 3ம் இடம் திரு. திருலோகசுந்தரம் ஏரம்புதாஸ் கனகாம்பிகைக்குளம்