State home for elders - Kaithady

Banner

DIRECTOR

Mr.Thambiyappa Kanagarajah

Superintendent

Tel: 021 205 7040

                Fax: 

Email: eldershomek@gmail.com

Vision:

Co-Ordinate The service Beyond Their Duty with good heartiness and sense of Responsibilities.

Mission:

To Promote The Lively hood of Senior Citizen’s Well Beings and Up grade their Standard with spiritually Mentally Physically and Social Movement activities.

Cadre Details:

S. NoPostPresent
strength
1Superintendent1
2Development Officer4
3Management Service Officer2
4Saathu Sevika2
5Driver1
6Attendant (Male)4
7Attendant (Female)6
8Cook3
9Electrician1
10OES1
11Watcher3
12Laborer (Male)4
13Laborer (Female)7
14Sanitary Laborer14
Total53

நான்கு சமயங்களை பின்பற்றும் சமூகங்களை கொண்ட இலங்கையில் முதியோர்களை வீட்டில் பராமரிக்கும் தன்மையே அதிகமாக காணப்படுகின்றது. இருந்த போதிலும் பிள்ளைகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் இல்லாத முதியவர்களும்¸சில தனிப்பட்ட உளபாங்கு காரணமாக உறவினர்களுடன் இணைந்து செயற்பட முடியாதவர்களும் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதன் காரணமாக முதியோர் இல்லங்களின்; தேவை உணரப்பட்டது.

அதாவது பிள்ளைகள்இல்லாதிருத்தல், திருமணமாகாதிருத்தல், பிள்ளைகளின் இழப்பு, விவாகரத்து பெற்றமை, ஒத்திசைவற்ற உளபாங்கு, பிள்ளைகள் தனிக்குடும்பம் சென்றமை போன்ற காரணங்களால் இவ்வாறான முதியவர்களை பராமரிப்பதற்காக முதியோர் இல்லங்களின் தேவை எமுந்த போது, வட மாகாணத்தில் 1952ம் ஆண்டு சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள கைதடியில் அரச முதியோர் இல்லம் அமைப்பதற்கான அடிக்கல் அப்போதைய பிரதமர் கௌரவ டி.எஸ்.சேனநாயக்காவினால் அடிக்கல் நாட்டப்பட்டது. 1954ம் ஆண்டு இவ் முதியோர் இல்லம் அப்போதைய பிரதமர் கௌரவ சேர். ஜோன் கொத்தலாவலை அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

ஆரம்பத்தில் 6 விடுதிகளுடன் 22 முதியோர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இவ் இல்லம் நாளடைவில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு சராசரியாக 200க்கு மேற்பட்ட முதியவர்களை வைத்து பராமரிப்பதற்கு ஏற்ற வசதிகளுடனும்¸ஆளணியுடனும் தற்போது இயங்கி வருகின்றது.

இங்கு வசிக்கும் முதியோர்களுக்கு, போசணையாளரின் சிபார்சுக்கமைய தரமான உணவு வழங்குதல்,சிறந்த சுகாதார,மருத்துவ வசதி வழங்குதல் ,பொழுது போக்கு வசதிகளை வழங்குதல் போன்ற சேவைகள் வழங்கப்பட்டுவருகின்றது.
இது வட மாகாண சமூக சேவைகள் திணைக்களத்திற்கு கீழ் இயங்கும் ஒரு அரச முதியோர் இல்லமாக இருப்பதினால் உணவு மற்றும் நிர்வாகச்செலவுகளுக்கு அரச நிதி ஒதக்கீடு செய்யப்படுகின்றது. இருந்தபோதிலும் எதிர்பாராமல் ஏற்படும் செலவுகளை ஈடுசெய்வதற்கு நன்கொடையாளர்களிடம் இருந்தும் நிதி பெறப்படுகின்றது. இந்நிதியை கையாள்வதற்கு அமைச்சு செயலாளரினால் முகாமைத்துவ குழு உருவாக்கப்பட்டு செயற்பட்டுவருகின்றது.

தற்போது வசிக்கும் முதியோர்களின் எண்ணிக்கை
ஆண்கள் :99
பெண்கள் :88
படுக்கை நோயாளிகள்:21
நாளாந்த செயற்பாட்டிற்கு உதவியாளர் தேவைப்படுவோர்:42
உள நோயாளிகள்: 68
மாற்றுத்திறனாளிகள்: 14

பௌதிக வளங்கள்
• சைவ ஆலயம்
• சமையலறை
• மூத்தோர் பூங்கா
• மின் இயந்திர அறை
• கிறிஸ்தவ ஆலயம்
• நூல் நிலையம்
• திறந்த வெளி அரங்கு
• பிரேத அறை
• களஞ்சிய அறை
• கலாசார மண்டபம்
• மூத்தோர் தங்கும் விடுதிகள் :- (இல்லம் 1,2,3,4,5,6,7,8,11)
• தியான மண்டபம்
• திரையரங்கு
• சிகை அலங்கரிப்பு நிலையம்
• உணவு விடுதி


நன்கொடை மேற்கொள்ள விரும்புவர்கள் பின்வரும் கணக்கிலக்கத்திற்கு பணத்தை வைப்பு செய்யலாம். பொருட்களும் நன்கொடையாக வழங்கலாம்.
இலங்கை வங்கி கணக்கிலக்கம்: 71875606  கிளை: கைதடி
கணக்கின் பெயர்: அரசமுதியோர் இல்லம், கைதடி

 

Contact Details

Postal Address : Kandy Road, Kaithady

General Telephone: 021 320 2464

Fax No. : 021 205 7040

E-mail: eldershomek@gmail.com

Designation Name  Telephone Number  Email