October 28, 2026

55 bus sin

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகிலுள்ள நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கண்காணிப்பின் கீழ், இணைந்த நேர அட்டவணைக்கு அமைவான நெடுந்தூரப் பேருந்துச் சேவைகளை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று (27.10.2026) செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். யாழ்ப்பாண நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, நகரின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கு அனைத்துப் போக்குவரத்துச் சேவை வழங்குநர்களும் இப்பேருந்து நிலையத்திலிருந்து சேவைகளை முன்னெடுப்பது அவசியம் எனவும் […]

55 bus sin Read More »

57 audit sin

வடக்கு மாகாணத்தின் பிரதம உள்ளகக் கணக்காய்வாளராக செ.ரகுநாதன் அவர்களை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நியமித்துள்ளார். அவருக்கான நியமனக் கடிதம் இன்று (27.10.2026) செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் வைத்து ஆளுநரால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்களும் கலந்துகொண்டார்.

57 audit sin Read More »

56 productivity sin

தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் விசேட திறமை மற்றும் திறமை விருதுகளைப் பெற்றுக்கொண்ட வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களைச் சேர்ந்த 247 நிறுவனங்களை மதிப்பளிக்கும் நிகழ்வில், கௌரவ பிரதியமைச்சர் சதுரங்க அபயசிங்க மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் பங்கேற்றனர். கிளிநொச்சி ஆர்.எஸ்.கிரீன் பாரதி ரெஷேhட்டில் இன்று (27.10.2026) செவ்வாய்க்கிழமை இந்நிகழ்வு நடைபெற்றது. விருந்தினர்கள் இன்னிய வாத்திய இசையுடன் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது. சுமார் 20 ஆண்டுகளாகச் சிங்கள மொழியில் மாத்திரம்

56 productivity sin Read More »

53 eye sin

வடக்கு மாகாணத்தில் முதலாம் தர மாணவர்களில் சுமார் 10 பேரில் ஒருவருக்குப் பார்வைக் குறைபாடு இருப்பது, ‘தெளிவான பார்வை, பிரகாசமான எதிர்காலம் – கட்டம் II’ பாடசாலைக் கண் சுகாதாரத் திட்டத்தின் ஊடாகக் கண்டறியப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முக்கிய கண்டறிதல்கள் அடங்கிய அறிக்கையை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் கண் பிரிவு மருத்துவ நிபுணர் எம்.மலரவன் அவர்கள் இன்று (26.10.2026) திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் வைத்து வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் கையளித்தார். கடந்த ஜூலை 21ஆம்

53 eye sin Read More »