இத் தீபத் திருநாளில் உங்கள் வாழ்க்கையில் புது வண்ணங்கள் ஒளிரட்டும். மக்களின் மனதில் அன்பு, அமைதி, சந்தோஷம் என மூன்றையும் பரப்பும் ஒரு அழகிய ஒளியாய் இந்த தீபாவளி பண்டிகை ஒவ்வொரு தனிமனிதனின் கனவையும் நிறைவேற்றும் ஒரு புதிய ஒளியாக அமைந்திட வேண்டும்.
தீபாவளி பண்டிகையானது தத்துவம் நிறைந்ததாகவும் ஒழுக்கவியல் கருத்துக்களை கொண்டதாகவும் உள்ளது. அந்த வகையில் இது வெறும் பண்டிகை மட்டுமல்லாது வாழ்வினைச் செம்மையாக்கும் மனிதநேய ஒருமைப்பாட்டை வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்வதற்கு பண்டிகைகள் துணைபுரிகின்றன.
இத் தீபாவளி திருநாளில் வட மாகாணத்தை முன்னேற்ற அனைவரும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து அனைத்து செயற்பாடுகளிலும் துறைசார்ந்த வல்லுனர்களும் ஒன்றாக கைகோர்த்து செயற்பட்டு, எமது மக்களின் பொருளாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உழைப்பதன் மூலமாக எமது மாகாணத்தை தலை சிறந்த மாகாணமாக மாற்றமுடியும்.
ஒளியினால் நிறைந்து அழகாக காட்சியளிக்கும் இந்த நாளிலிருந்து விரைவாகவும், வினைத்திறனாகவும், விவேகத்துடனும் செயற்பட தீபத் திருநாளில் வாழ்த்துக்களை தெரிவிகின்றேன்.
கெளரவ நாகலிங்கம் வேதநாயகன்,
ஆளுநர், வடக்கு மாகாணம்.