சௌபாக்கியா வீட்டுத்தோட்டம்

மத்திய விவசாய அமைச்சு மற்றும் மத்திய விவசாயத் திணைக்களத்தின் அனுசரணையுடன் வட மாகாண விவசாயத் திணைக்களத்தினால் அமுல்படுத்தப்படும் “சௌபாக்கியா வீட்டுத்தோட்டம்” நிகழ்ச்சித் திட்டத்தில் வீட்டுத் தோட்ட விதைகள் விநியோகிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டத்திற்கு தலா 10,000 வீட்டுத்தோட்ட விதைப் பொதிகளும் கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தலா 5,000 வீட்டுத்தோட்டப் பொதிகளுமாக வட மாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களிற்குமாக 35,000 வீட்டுத் தோட்டங்கள் அமைப்பதற்கான வீட்டுத்தோட்ட விதைப் பொதிகள் வழங்கப்படுகின்றன.

இவ் வீட்டுத்தோட்டப் பொதியொன்றினுள் 0.25 g கத்தரிஇ 0.25g மிளகாய், 1.67g வெண்டி, 3g பயற்றை ஆகிய ஒவ்வொன்றிலும் தலா 25-30 விதைகள் மற்றும் அவரை 3g விதைகள் அடங்கிய பொதி ஒவ்வொன்றும் ரூபா 20 வீதம் வழங்கப்படுகிறது.

வீட்டுத் தோட்டச் செய்கையில் ஆர்வமுள்ள, கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் வழங்கப்பட்ட வீட்டுத் தோட்டப் பொதியினைப் பெற்றிருக்காதவர்கள் மற்றும் வேறு திட்டங்களினூடாக வீட்டுத் தோட்ட உள்ளீடுகளினைப் பெற்றிருக்காதவர்கள், குடும்பம் ஒன்றிற்கு ஒரு அங்கத்தவரிற்கு மட்டும், பதிவு செய்யப்பட்ட முன்னுரிமை அடிப்படையில் இவ் வீட்டுத் தோட்டப் பொதிகள் வழங்கப்படுகின்றன.

ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழுப் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம், கிராமசேவகர் பிரிவு, பிரதேச செயலாளர் பிரிவு என்பவற்றைக் குறுந்தகவல் மூலம் அந்தந்த பிரிவு விவசாயப் போதனாசிரியர்களுக்கு அனுப்பி வைப்பதன் மூலம் இவ் வீட்டத்தோட்டப் பொதிகளினைப் பெற்றுக் கொள்ளலாம்.

 

யாழ்ப்பாண மாவட்டத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்

 077-6913456 – சாவகச்சேரி, அம்பன், கரவெட்டி, பருத்தித்துறை
 077-6106648 – சங்கானை, காரைநகர், வேலணை, நெடுந்தீவு, ஊர்காவற்துறை
 077-5254778 – யாழ்ப்பாணம், நல்லூர்
 077-0358202 – சண்டிலிப்பாய், உடுவில்
 077-6305749 – தெல்லிப்பளை, கோப்பாய்

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்

 077-2549877 – திருவையாறு, கனகாம்பிகைக்குளம், பாரதிபுரம், கிருஸ்ணபுரம், அம்பாள் குளம், கணேசபுரம், இரத்தினபுரம்
 077-1636316 – ஸ்கந்தபுரம், வன்னேரிக்குளம், அக்கராயன்குளம்
 077-9592751 – உருத்திரபுரம், புதுமுறிப்பு
 077-1974101 – மாயவனூர், இராமநாதபுரம்
 077-7040979 – முழங்காவில், ஜயபுரம்
 077-1708069 – பள்ளிக்குடா, நல்லூர், பூநகரி, கொல்லைக்குறிச்சி
 077-5886993 – புன்னைநீராவி, புளியம்பொக்கணை, தர்மபுரம், முரசுமோட்டை, கண்டாவளை, குமாரபுரம், உமையாள்புரம்
 077-3618645 – அரசர்கேணி, கிளாலி, முகமாலை, கோவில்வயல், தர்மக்கேணி, பளை

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்

 077-0337898 – முள்ளியவளை
 077-4125144 – சிலாவத்தை
 077-9235569 – குமளமுனை
 076-9806872 – ஒட்டுசுட்டான்
 077-5814765 – தண்டுவான்
 077-3469357 – ஒலுமடு, மாங்குளம்
 077-6455459 – கொல்லவிளாங்குளம், பாலிநகர்
 077-5160888 – பாண்டியன்குளம்
 077-5448585 – கோட்டைகட்டியகுளம், ஐயங்கன்குளம்,
 077-1308426 – துணுக்காய்
 076-7409318 – அனிஞ்சியன்குளம்
 077-6669025 – உடையார்கட்டு, விசுவமடு
 076-1832388 – மாணிக்கபுரம்
 077-2111707 – கோம்பாவில்
 077-7393658 – மந்துவில்
 076-7511106 – முத்தையன்கட்டு
 077-8999001 – கணேசபுரம்

மன்னார் மாவட்டத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்

 077-6640526 – மன்னார், தோட்டவெளி, உயிலங்குளம், மாதோட்டம்
 075-9747216 – பாலம்பிட்டி, இரணைஇலுப்பைக்குளம், மடு, காக்கையன்குளம், தேக்கம்
 077-6285657 – பி.பி. பொற்கேணி, சிலாவத்துறை, கொண்டச்சி
 077-8318326 – ஆட்காட்டிவெளி, மாந்தை
 077-2370239 – நானாட்டான், வஞ்சியன்குளம், முருங்கன், பரிகாரிகண்டல்
 075-9743810 – இலுப்பைக்கடவை, வெள்ளாங்குளம், பெரியமடு, விடத்தல்தீவு

வவுனியா மாவட்டத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்

 077-9529491 – நெடுங்கேணி
 077-2432147 – கனகராயன்குளம்
 076-6396809, 077-6586544, 077-0706977 – ஓமந்தை
 077-9365376 – கோவில்குளம்
 077-6778672, 0773461690, 076-3651710, 077-2852313 – பம்பைமடு
 0777-366060, 077-6370016 – பாவற்குளம்
 077-5026106 – செட்டிகுளம்
 078-9138606, 077-0899558 – உலுக்குளம்
 071-4478119 – மடுக்கந்த

விரைவான மத்திய கால உணவு உற்பத்தி தேசிய செயற்றிட்டத்தின் கீழ் மேலதிக உணவுப் பயிர்களை செய்கைபண்ணும் விவசாயிகளுக்கு விதைகளுக்கான சலுகைகளை அமுல் செய்வதற்கான ஆலோசனைகள்

சுற்றுநிருபம் – மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு

மாகாணப் பணிப்பாளர்
விவசாயத் திணைக்களம்
வடக்கு மாகாணம்