COVID 19 உலகளாவிய தொற்றுக் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த நலிவுற்ற மக்களுக்கான இடர்காலக் கொடுப்பனவு -வவுனியா

தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான திரு நோயல் செல்வநாயகம் (Chairman, SENOK Vehicle Combine Pvt. Ltd) அவர்களின் நிதிப் பங்களிப்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு அ.பத்திநாதன் அவர்களின் வழிகாட்டலின்கீழ் COVID 19 உலகளாவிய தொற்றுக் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த நலிவுற்ற மக்களுக்கான இடர்காலக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் அவர்களின் தலைமையில் 2020.05.14 அன்று மு.ப. 10.00 மணிக்கு வவுனியா மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்தில் ஆரம்பமாகியது.

இந்நிகழ்வில் திருமதி ச.மோகநாதன் (செயலாளர், உள்@ராட்சி அமைச்சு, வட மாகணம்) அவர்கள், திரு ஆர்.வரதீஸ்வரன் (செயலாளர், மகளிர் விவகார அமைச்சு, வட மாகாணம்.) அவர்கள், திருமதி நளாயினி இன்பராஜ் (பணிப்பாளர், கிராம அபிவிருத்தித் திணைக்களம், வட மாகாணம்) ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாகாண சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் கிராம அபிவிருத்தித் திணைக்களம் ஆகியவற்றினூடாகத் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளில் மூன்றும் அதற்குட்பட்ட அங்கத்தவர்களைக் கொண்ட 84 குடும்பங்களுக்கு 2,000 ரூபா வீதம் 168,000 ரூபாவும் மூன்று அங்கத்தவர்களுக்கு மேற்பட்ட 35 குடும்பங்களுக்கு 4,000 ரூபா வீதம் 140,000 ரூபாவும் (மொத்தத் தொகை 308,000.00) வழங்கப்பட்டுள்ளது.

.