உலகளாவிய ரீதியில் கொரோனா நோயின் பரவலினால் எதிர்காலத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் இறக்குமதி பாதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிவவுகின்றன.
நமது பிரதேசங்களில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலை மற்றும் ஊரடங்குச் சட்ட நடைமுறைகள் ஆகியவற்றினால் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கான விதை மற்றும் நடுகைப்பொருட்களினைப் பெற்றுக் கொள்வதில் விவசாயிகள் எதிர் நோக்கிய நெருக்கடியினை குறைப்பதே இதன் நோக்கமாகும்
விவசாயிகள் தமது பயிர்ச் செய்கை நடவடிக்கைகளினை தடையின்றி மேற்கொள்வதற்கேதுவாகவும் பொது மக்கள் இவ் அசாதாரண சூழ்நிலையில் தமது சுய தேவையைப் பூர்த்தி செய்வதற்கு ஏற்ற வகையில் வீட்டுத் தோட்டச் செய்கையில் ஈடுபடுவதனை ஊக்குவிப்பதற்காகவும்; யாழ் மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலகத்தினால் மத்திய விவசாயத் திணைக்களத்தின் விதை மற்றும் நடுகைப்பொருள் அபிவிருத்தி மற்றும் விற்பனைப் பிரிவு, யாழ் மாவட்ட விதையுற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம், காரைநகர் இளம் விவசாயிகள் கழகம், வெங்காய உண்மை விதையுற்பத்தியாளர் சங்கம் ஆகியவற்றின் உதவியுடன் நடமாடும் சேவையினுடாக விதை மற்றும் நடுகைப்பொருள் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நடமாடும் விற்பனையின் ஊடாக பயற்றை, வெண்டி, பாகல், தக்காளி, கத்தரி ஆகிய மரக்கறி விதைகளும், மிளகாய், வெங்காய உண்மை விதை, நிலக்கடலை, பயறு, குரக்கன், மரவள்ளி துண்டங்கள், காளான் வித்திகள் என்பனவும் விற்பனை செய்யப்பட்டுவருகின்றன.
விவசாயப் போதனாசிரியர் பிரிவு ரீதியாக மேற்கொள்ளப்பட்ட நடமாடும் விற்பனைச் செயற்பாடுகள் தொடர்பான விபரங்கள்
திகதி | விவசாயப் போதனாசிரியர் பிரிவு | கொள்வனவு செய்தவர்களின் எண்ணிக்கை | விநியோகிக்கப்பட்ட விதைகள் |
11.04.2020 | தெல்லிப்பளை | 128 | பயற்றை, வெண்டி, பாகல், தக்காளி, கத்தரி
மிளகாய், வெங்காய உண்மை விதை, நிலக்கடலை, பயறு, குரக்கன்,மரவள்ளி துண்டங்கள், காளான் வித்திகள் |
11.04.2020 | நல்லூர் | 85 | |
15.04.2020 | தொல்புரம் வட்டுக்கோட்டை | 330 | |
17.04.2020 | புத்தூர் அச்சுவேலி | 220 | |
18.04.2020 | உரும்பிராய் ரூ நீர்வேலி | 148 | |
18.04.2020 | கைதடி | 58 | |
20.04.2020 | உடுவில் | 65 | |
21.04.2020 | கரவெட்டி புலோலி | 55 | |
22.04.2020 | வேலணை ஊர்காவற்றுறை | 120 |
விற்பனை நடவடிக்கைகள்
வீட்டுத் தோட்டம், வர்த்தக ரீதியான மரக்கறிச் செய்கை மற்றும் மறுவயற்பயிர் செய்கை என்பவற்றை மேற்கொள்வதற்கேதுவாக் விவசாயிகள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்ட விதைகளின் விபரம் பின்வருமாறு:
விநியோகிக்கப்பட்ட விதை | அளவு | விநியோகிக்கப்பட்ட விதை | அளவு |
பயற்றை | 79.61 கிகி | கத்தரி | 6.53 கிகி |
வெண்டி | 74.14கிகி | மிளகாய் | 24.95கிகி |
பாகல் | 26.19கிகி | புசித்தா | 50 கிகி |
தக்காளி | 10.835கிகி | வத்தகை | 20 கிகி |
புடோல் | 06கிகி | உழுந்து | 60கிகி |
பூசணி | 2.5கிகி | சோளம் | 05கிகி |
கீரை | 43.70கிகி | எள்ளு | 26கிகி |
அவரை | 60கிகி | சணல் | 21கிகி |
கறிமிளகாய் | 2கிகி |