கொவிட் – 19 (COVID – 19) நெருக்கடி நிலையின் போது கூட்டுறவு துறையின்  உன்னத சேவை

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் கூட்டுறவுத் துறைக்கென சிறப்பான ஓர் இடம் உண்டு. கடந்த காலங்களில் பல்வேறு அனர்த்தங்கள் மற்றும் நெருக்கடியான நிலைமைகளின் போது கூட்டுறவுச் சங்கங்கள் தமது அங்கத்தவர்களுக்கு மட்டுமன்றி முழு மக்களுக்குமே மிகவும் சிறப்பாக சேவையாற்றி வந்துள்ளன. அந்தவகையில் நாட்டின்  கொவிட் – 19 (COVID–19) நெருக்கடியான நிலையின் போதும் கூட்டுறவுத்துறை அனைத்து மக்களுக்கும் அளப்பெரும் சேவையாற்றியுள்ளது.

Free Spins No Deposit Required Casinos in the UK for 2023

கொவிட்-19 (COVID-19) நெருக்கடி காரணமாக முழுநாடுமே முடக்கப்பட்ட போது வடக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் உள்ள சமுர்த்திப் பயனாளிகளுக்கு ரூபா 140 மில்லியனுக்கு அதிகமான மொத்தப் பெறுமதியுடைய சுமார் 94,000 சமுர்த்தி நிவாரணப் பொதிகளை விநியோகிப்பதில் அவ் மாவட்டங்களிலுள்ள பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் சிறப்பாக செயலாற்றியிருந்தன. சமுர்த்தி அதிகாரிகளால் குறிப்பிடப்பட்ட இடங்களில் குறிப்பிடப்பட்ட அளவுகளில் கூட்டுறவுச் சங்கங்களால் இவ் விநியோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது இவ் விநியோகத்தில் அதிகமான பணியாளர்களையும் வாகனங்களையும் பயன்படுத்தியிருந்த போதும் கணிசமான இலாபமெதனையும் கூட்டுறவுச் சங்கங்கள் அடைந்திருக்கவில்லை. இருந்தபோதிலும் சமூக அக்கறை, சேவை மனப்பான்மை காரணமாகவே கூட்டுறவுச் சங்கங்கள் இச்செயற்பாட்டை மேற்கொண்டிருந்தன.

தற்போதைய நெருக்கடி காரணமாக முழு நாடுமே முடக்கப்பட்டிருந்த போது வடக்கு மாகாணத்திலுள்ள பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் முடங்கநிலை அறிவிக்கப்பட்ட போது தம்மிடம் இருந்த இருப்புகளுக்கு மேலதிகமாக உணவு ஆணையாளரூடாக ஏறத்தாழ 59 மில்லியன் பெறுமதியான அத்தியவசியப் பொருட்களை பெற்று கட்டுப்பாட்டு விலையில் கிளை விற்பனை நிலையங்களூடாக மக்களுக்கு விநியோகித்திருந்தன. இந் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக வடக்கு மாகாண சபையால் ரூபா 10 மில்லியனும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களால் ரூபா 10 மில்லியனுமாக மொத்தமாக ரூபா 20 மில்லியன் முற்பணமாக வடக்கு மாகாண பல நோக்கு கூட்டுறவுச் சங்ககங்களின் சமாசத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. இக்காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில் பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்களால் நடாத்தப்படும் 12 அரிசி ஆலைகள் விவசாயிகளிடமிருந்து அரசாங்க உத்தரவாத விலையின் அடிப்படையில் கொள்வனவு செய்த நெல்லில் 284000 kg இனை அரிசியாக்கி தமது கிளை நிலையங்களூடாக மக்களுக்கு விநியோகித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக மாகாணத்திலுள்ள அனைத்து மக்களிற்கும் பொருட்கள் சென்றடைந்ததுடன் உணவுப்பொருட்தட்டுப்பாடு ஏற்படுவதற்கான நிலையும் தவிர்க்கப்பட்டிருந்தது.

இந் நெருக்கடியான நிலையின்போது வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கி அத்தியவசிய பொருட்கொள்வனவிற்காக, கரைச்சி தெற்கு பல நோக்கு கூட்டுறவுச் சங்கம், புதுக் குடியிருப்பு பல நோக்கு கூட்டுறவுச் சங்கம், துணுக்காய் பல நோக்கு கூட்டுறவுச் சங்கம், வவுனியா வடக்கு பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றுக்கு தலா 1 மில்லியன் வீதமும் மடு பல நோக்கு கூட்டுறவுச் சங்கம், மன்னார் பல நோக்கு கூட்டுறவுச் சங்கம், என்பனவற்றுக்கு தலா ரூபா 0.5 மில்லியனுமாக மொத்தம் ரூபா 5 மில்லியனினை குறைந்த வட்டிக் கடனாக வழங்கி உதவியிருந்தது.

ஊரடங்குச் சட்டத்தால் நாடு ஸ்தம்பித்திருந்த நிலையிலும் பண்டத்தரிப்பு பல நோக்கு கூட்டுறவுச் சங்கம், தென்மராட்சி மேற்கு பல நோக்கு கூட்டுறவுச் சங்கம், சங்கானை பல நோக்கு கூட்டுறவுச் சங்கம், வவுனியா தெற்கு பல நோக்கு கூட்டுறவுச் சங்கம், கரைச்சி கிழக்கு பல நோக்கு கூட்டுறவுச் சங்கம்  என்பன தமது வெதுப்பகங்கள் மூலம் பாண், பணிஸ் போன்ற உற்பத்திப் பொருட்களை தமது விற்பனை நிலையங்களூடாகவும் நடமாடும் சேவைகள் மூலமாகவும் மக்களிற்கு விநியோகித்து பெரும் சேவையாற்றியிருந்தன. திடீர் முடக்க நிலையால் அவதியுற்றமக்களுக்கு கூட்டுறவுச் சங்கங்களின் மேற்படி விநியோகம் ஒரு வரப்பிரசாதமாய் அமைந்திருந்தது.

வடக்கு மாகாண கூட்டுறவுச் சங்கங்களின் சமாசமானது உணவு ஆணையாளரிடமிருந்தும்  இதர நிறுவனங்களிடமிருந்தும் பொருட்களை பெற்று பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்களுக்கு விநியோகித்ததன் மூலம் வடக்கு மாகாணம் முழுதும் உணவுப்பொருள் தட்டுப்பாடு ஏற்படாது மக்களை பாதுகாப்பதில் பெரும்பங்காற்றியிருந்தது. அதுமட்டுமன்றி வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஆழியவளை  மற்றும் வலிதெற்கு பிரதேச செயலர் பிரிவிலுள்ள ஏழாலை ஆகிய கிராமங்களில் மக்கள் கடைகளை நிறுவி கிராமபுற வறிய மக்களுக்கு கட்டுப்பாட்டு விலையில் பொருட்களை விநியோகித்து வருகிறது.

கடந்த காலத்திலும் சரி இன்றைய காலத்திலும் சரி நெருக்கடியான நிலையின்போதும் அனர்த்த காலத்தின்போதும்  மக்கள் அனைவருக்கும் சேவையாற்றும் ஒர் துறையாக கூட்டுறவுத்துறை விளங்குகிறது.