04 fin comm sin

நிதி ஆணைக்குழுவுக்கும் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களின் ஆளுநர்கள் மற்றும் பிரதம செயலாளர்களுக்கும் இடையிலான இணையவழிக் கலந்துரையாடல் இன்று (04.11.2026) புதன்கிழமை நடைபெற்றது.

இதன்போது, மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட செலவினங்களின் முன்னேற்றம், 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் டித்வா மீள்கட்டுமானப் பணிகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.

மேலும், எதிர்காலத்தில் மாகாண சபைகளின் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடனும் பயனுறுதியுடனும் முன்னெடுப்பதற்காக, கொள்கை ரீதியாக ஆராயப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி ஜயந்த லால் ரத்னசேகர, மத்திய மாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ ஆகியோருடன் மாகாணங்களின் பிரதம செயலாளர்கள், நிதி மற்றும் திட்டமிடலுக்குப் பொறுப்பான பிரதிப் பிரதம செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

நிதி ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கலந்துரையாடலை வழிநடத்தினர்.