May 22, 2026

22 sin mc commissioner

யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய ஆணையாளராக டி.சி.அரவிந்தராஜ் அவர்களும், வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக எஸ்.கிருஸ்ணேந்திரன் அவர்களும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்ட இந்த இரு அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, ஆளுநர் செயலகத்தில் இன்று (19.05.2026) செவ்வாய்க்கிழமை கௌரவ ஆளுநர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

22 sin mc commissioner Read More »

21 sin ariyaathai

எந்தத் தடைகளையும் தாண்டும் உறுதியும் மனத்திடமும் உள்ள இந்தச் சாதனைப் பெண்களால், எதிர்காலத்தில் வறுமையில் முதலிடத்திலிருக்கும் முல்லைத்தீவு மாவட்டம் வறுமையற்ற இறுதி நிலைக்குச் செல்லும் என்று நான் உறுதியாக நம்புகின்றேன். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். முல்லைத்தீவின் வீரப்பெண்மணி அரியாத்தையின் நினைவாக, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பல்துறைப் பெண் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் ‘அரியாத்தை விருது’ வழங்கும் நிகழ்வு, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இன்று (19.05.2026) செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்டச்

21 sin ariyaathai Read More »