பல்துறைப் பெண் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் ‘அரியாத்தை விருது’ வழங்கும் நிகழ்வு, முல்லைத்தீவு மாவட்டச் செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
எந்தத் தடைகளையும் தாண்டும் உறுதியும் மனத்திடமும் உள்ள இந்தச் சாதனைப் பெண்களால், எதிர்காலத்தில் வறுமையில் முதலிடத்திலிருக்கும் முல்லைத்தீவு மாவட்டம் வறுமையற்ற இறுதி நிலைக்குச் செல்லும் என்று நான் உறுதியாக நம்புகின்றேன். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். முல்லைத்தீவின் வீரப்பெண்மணி அரியாத்தையின் நினைவாக, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பல்துறைப் பெண் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் ‘அரியாத்தை விருது’ வழங்கும் நிகழ்வு, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இன்று (19.05.2026) செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்டச் […]
