யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான ஆதனமொன்று, வெளிப்படுத்தல் உறுதி மூலம் தனிநபர் ஒருவருக்குச் சொந்தமாக்கப்பட்டுள்ளமை தொடர்பாக, சர்ச்சைக்குரிய ஆதனத்தை ஆளுநர் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார்.
யாழ்ப்பாணம் நகரில் (ஜே/72 கிராம உத்தியோகத்தர் பிரிவு) யாழ். மாநகர சபைக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் பெறுமதிமிக்க ஆதனமொன்று, வெளிப்படுத்தல் உறுதி மூலம் தனிநபர் ஒருவருக்குச் சொந்தமாக்கப்பட்டுள்ளமை தொடர்பாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கு, வடக்கு மாகாண அவைத் தலைவரால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த முறைப்பாட்டுக்கு அமைவாக, சர்ச்சைக்குரிய ஆதனத்தை ஆளுநர் அவர்கள் இன்று (26.05.2026) செவ்வாய்க்கிழமை காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுகளை மேற்கொண்டார். குறித்த ஆதனமானது யாழ். மாநகர சபைக்கு உரித்தானது என்பதை […]
