Balasingam Kajenderan

புதுப்பிக்க சக்தி ஊடான திட்டங்கள் ‘சூழல் நேயமான’ திட்டங்கள் என்பதால் அவை அவசியமானவை – கௌரவ ஆளுநர்

இலங்கையின் வட மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக்கு ஆதரவளிக்கும் வகையில், இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகார சபையால் முன்னெடுக்கப்படும் ‘உத்திசார் சுற்றுச்சூழல் மதிப்பீடு’ தொடர்பான விசேட கலந்துரையாடல், வட மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை (24.04.2026) நடைபெற்றது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் இந்த ஆய்வு மற்றும் திட்டமிடல் குறித்து ஜப்பானின் ஓரியண்டல் கன்சல்டன்ட்ஸ் குளோபல் மற்றும் இலங்கையின் கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் […]

புதுப்பிக்க சக்தி ஊடான திட்டங்கள் ‘சூழல் நேயமான’ திட்டங்கள் என்பதால் அவை அவசியமானவை – கௌரவ ஆளுநர் Read More »

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மாகாண உயர் அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தைச் சுற்றுலாத்துறையில் துரித கதியில் முன்னேற்றும் நோக்கில், இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மாகாண உயர் அதிகாரிகளுடனான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (24.04.2026) மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. மாகாணத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் தற்போதைய கள யதார்த்தத்தில் உள்ள சவால்கள், நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து இச்சந்திப்பில் மிகவும் ஆழமாக ஆராயப்பட்டது. இக்கலந்துரையாடலில் உரையாற்றிய கௌரவ

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மாகாண உயர் அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. Read More »

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் ஆலோசகருக்கும் கௌரவ ஆளுநருக்கு இடையே சந்திப்பு இடம் பெற்றது

நெடுந்தீவு பிரதேசத்துக்குச் சென்று பணியாற்றும் அலுவலர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஆபத்துக் கொடுப்பனவை அதிகரிக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்னவின் ஆலோசகரும், முன்னாள் மூத்த நிர்வாக அதிகாரியுமான அசோக பீரிஸ் மற்றும் வடக்குw மாகாண கௌரவ ஆளுநருக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (24.04.2026) வெள்ளிக்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. நெடுந்தீவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தற்போது

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் ஆலோசகருக்கும் கௌரவ ஆளுநருக்கு இடையே சந்திப்பு இடம் பெற்றது Read More »

மணல் மாபியாவைப் போலவே நெல் சந்தையிலும் மாபியாக்கள் இயங்கி வருகின்றனர். இந்தச் சுரண்டலைத் தடுக்க இடைத்தரகர்களற்ற ஒரு பொறிமுறை அவசியமாகும். – கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.

விவசாயிகளிடமிருந்து நெல்லை நியாயமான விலைக்குக் கொள்வனவு செய்யவும், மக்களுக்கு மலிவு விலையில் அரிசியை வழங்கவும் கூட்டுறவுச் சங்கங்களாலேயே முடியும். எமது இந்த மக்கள் நல முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் செயற்படும் மாபியாக்களைத் தாண்டி, இத்திட்டத்தை நாம் நிச்சயம் வெற்றிகரமாகச் செய்து முடிப்போம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் கூட்டுறவு இயக்கத்தின் ஊடாக விவசாயத் துறையில் நவீன மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில், துணுக்காய் பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் மற்றும்

மணல் மாபியாவைப் போலவே நெல் சந்தையிலும் மாபியாக்கள் இயங்கி வருகின்றனர். இந்தச் சுரண்டலைத் தடுக்க இடைத்தரகர்களற்ற ஒரு பொறிமுறை அவசியமாகும். – கௌரவ ஆளுநர் தெரிவித்தார். Read More »

வடக்கு மாகாணத்தில் தான் கண் சத்திர சிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியல் ‘பூச்சிய’ நிலையில் உள்ளது. ஏனைய மாகாண மக்கள் கூட இங்கு வந்து சத்திர சிகிச்சை மேற்கொண்டு செல்கின்றனர். – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இலங்கையில் கண் சுகாதாரம் தொடர்பான நடவடிக்கைகளில் வட மாகாணமே முன்னோடியாகத் திகழ்கின்றது. அந்த வரிசையில் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமாகும் ‘கிராமிய ஒளி வாழ்வுத்திட்டம்’ (Rural Life of Light), முழு நாட்டுக்கும் ஒரு புதிய வழிகாட்டியாக அமையப்போகின்றது என வட மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தார். வட மாகாண மக்களின் கண் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட ‘கிராமிய ஒளி வாழ்வுத்திட்டத்தின்’ அங்குரார்ப்பண நிகழ்வும், சுகாதார அதிகாரிகளுக்கான விசேட பயிற்சிப் பட்டறையும் இன்று

வடக்கு மாகாணத்தில் தான் கண் சத்திர சிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியல் ‘பூச்சிய’ நிலையில் உள்ளது. ஏனைய மாகாண மக்கள் கூட இங்கு வந்து சத்திர சிகிச்சை மேற்கொண்டு செல்கின்றனர். – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பெருமிதத்துடன் தெரிவித்தார். Read More »

விவசாய அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோகம் மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றின் கீழ் 2026ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த விசேட துறைசார் மீளாய்வுக் கூட்டம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று (23.04.2026) மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஊடாக சுமார் 1,875 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் பாரிய உட்கட்டமைப்புப் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. குறிப்பாக,

விவசாய அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

கச்சதீவுப் பெருந்திருவிழாவில்களத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய நெடுந்தீவு பிரதேச சபை ஊழியர்களுக்கு கௌரவ ஆளுநர் மெச்சுரை வழங்கி கௌரவித்தார்.

கச்சதீவுப் பெருந்திருவிழாவின் போது களத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய நெடுந்தீவு பிரதேச சபையின் ஊழியர்களைப் பாராட்டி, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் மெச்சுரை வழங்கி கௌரவித்தார். இந்த விசேட நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (23.04.2026) வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.சுதர்சன், கச்சதீவுப் பெருந்திருவிழாவின் வெற்றிக்கு நெடுந்தீவு பிரதேச சபையின் செயற்பாடும் வகிபாகமும் மிக முக்கியமானதாகும். ஆயினும், களத்தில் நின்று கடுமையாக உழைக்கும் தமக்கான உரிய அங்கீகாரம்

கச்சதீவுப் பெருந்திருவிழாவில்களத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய நெடுந்தீவு பிரதேச சபை ஊழியர்களுக்கு கௌரவ ஆளுநர் மெச்சுரை வழங்கி கௌரவித்தார். Read More »

வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் அபிவிருத்தி திட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக மணல் விநியோகத்தை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதனை முறைப்படுத்தி அனைத்து மன்றங்களுக்கும் பொதுவானதொரு நடைமுறையை உடனடியாக அறிமுகப்படுத்துமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் உள்ளூராட்சி ஆணையாளருக்குப் பணிப்புரை விடுத்தார். வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து ஆகிய அமைச்சின் கீழ்

வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் அபிவிருத்தி திட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

வடக்கு மாகாண சுகாதார அமைச்சு ஊடாக 2026ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த துறைசார் மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சு, மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம், மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் மற்றும் நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் ஊடாக 2026ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த விசேட துறைசார் மீளாய்வுக் கூட்டம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று (22.04.2026) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழ் இவ்வாண்டு முக்கிய அபிவிருத்திப் பணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில்

வடக்கு மாகாண சுகாதார அமைச்சு ஊடாக 2026ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த துறைசார் மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. Read More »

சைவ சமயத்துக்கு பிணக்குகளைத் தீர்ப்பதற்கும் நெறிப்படுத்துவதற்கும் அதிகாரமுள்ள உறுதியான பீடம் அல்லது சபையொன்று உருவாக்கப்பட வேண்டும் -கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.

ஏனைய மதங்களுக்கு இருப்பதைப் போன்று, சைவ சமயத்துக்கும் பிணக்குகளைத் தீர்ப்பதற்கும் நெறிப்படுத்துவதற்கும் அதிகாரமுள்ள உறுதியான பீடம் அல்லது சபையொன்று உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் இரண்டாவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகளின் முதலாவது குருபூசை வைபவம், சித்திரைத் திருவாதிரை நாளான இன்று (22.04.2026) புதன்கிழமை காலை நல்லை ஆதீனத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில்

சைவ சமயத்துக்கு பிணக்குகளைத் தீர்ப்பதற்கும் நெறிப்படுத்துவதற்கும் அதிகாரமுள்ள உறுதியான பீடம் அல்லது சபையொன்று உருவாக்கப்பட வேண்டும் -கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். Read More »