விபத்துக்களை தணிப்பது மற்றும் தடுப்பது தொடர்பான பொறிமுறையை உருவாக்கும் நோக்கிலான கலந்துரையாடல்
விபத்துக்களை தணிப்பது மற்றும் தடுப்பது தொடர்பான பொறிமுறையை உருவாக்கும் நோக்கிலான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை மாலை (09.07.2025) நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் விபத்துக்கள் அதிகரித்துச் செல்லும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாக ஆளுநர் தனது முன்னுரையில் குறிப்பிட்டார். தொடர்ந்து விபத்துத் தணிப்புத் தொடர்பான விடயத்தை தன்னார்வமாக முன்னெடுக்கும், குழந்தை மருத்துவ நிபுணர் பி.சயந்தன் திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தினார். ‘பாதுகாப்பான வீதி, பாதுகாப்பான […]