Balasingam Kajenderan

கௌதாரிமுனை சுற்றுலா முதலீடுகளுக்கான காணிகளை அடையாளப்படுத்த பல்துறை குழு நியமனம்

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி கௌதாரிமுனைப் பிரதேசத்தில் சுற்றுலாத்துறை முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ள முதலீட்டாளர்களுக்குக் காணிகளை ஒதுக்குவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில், திணைக்களங்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்களை உள்ளடக்கிய பல்துறை குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான நா.வேதநாயகன் ஆகியோரின் தலைமையில் கௌதாரிமுனையில் சுற்றுலாத்துறை முதலீட்டாளர்களுக்காக இன்று (27.09.2026) […]

கௌதாரிமுனை சுற்றுலா முதலீடுகளுக்கான காணிகளை அடையாளப்படுத்த பல்துறை குழு நியமனம் Read More »

வடக்கு மாகாண மாணவர்களுக்கு 4 கோடியே 77 இலட்சம் ரூபா பெறுமதியான ஜனாதிபதி நிதிய உதவி வழங்கப்பட்டது

எமது நாட்டின் இலவசக் கல்வியைப் பயன்படுத்தி கற்று இன்று பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் நீங்கள் அங்கும் இலவசக் கல்வியையே பெறவுள்ளீர்கள். நீங்கள் படித்து முடித்த பின்னர் உங்களுக்கு இலவசக் கல்வியை வழங்கிய இந்த நாட்டுக்கு, உங்கள் சொந்த மாவட்டங்களிலேயே சேவையாற்றவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார். கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தின் உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்று (26.09.2026) சனிக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது.

வடக்கு மாகாண மாணவர்களுக்கு 4 கோடியே 77 இலட்சம் ரூபா பெறுமதியான ஜனாதிபதி நிதிய உதவி வழங்கப்பட்டது Read More »

வடக்கு மாகாணத்தில் முதலீட்டு வலயங்களை துரிதமாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை – முதலீட்டுச் சபைத் தலைவர் மற்றும் ஆளுநர் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள காங்கேசன்துறை, பரந்தன் மற்றும் மாங்குளம் ஆகிய மூன்று முதலீட்டு வலயங்களின் முன்னேற்றம், முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சவால்கள் மற்றும் முதலீடுகளை விரைவாக ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் துமிந்த ஹூலன்ஹமுவ தலைமையிலான குழுவினருக்கிடையில் இன்று (26.09.2026) சனிக்கிழமை ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் துமிந்த ஹூலன்ஹமுவ தலைமையிலான

வடக்கு மாகாணத்தில் முதலீட்டு வலயங்களை துரிதமாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை – முதலீட்டுச் சபைத் தலைவர் மற்றும் ஆளுநர் கலந்துரையாடல் Read More »

“தலைமன்னாரிலிருந்து எட்டு மணல் திட்டுகளைப் பார்வையிடும் வாய்ப்பு வடக்கு மாகாண சுற்றுலாத்துறையில் புதிய அத்தியாயத்தைத் திறக்கும்” – ஆளுநர்

தலைமன்னாரிலிருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய எட்டு மணல் திட்டுகளை சுற்றுலாவிகள் பார்வையிடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளமை, வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் புதிய அத்தியாயமாக அமையும். இதன் ஊடாக மன்னார் மாவட்டத்துக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவிகளின் வருகை கணிசமாக அதிகரிக்கும் என நம்புகின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகம், மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் வடக்கு மாகாண தொழிற்துறை மன்றம்

“தலைமன்னாரிலிருந்து எட்டு மணல் திட்டுகளைப் பார்வையிடும் வாய்ப்பு வடக்கு மாகாண சுற்றுலாத்துறையில் புதிய அத்தியாயத்தைத் திறக்கும்” – ஆளுநர் Read More »

மன்னார் மாவட்டத்தில் திண்மக் கழிவு முகாமைத்துவம், சுற்றுலா அபிவிருத்தி மற்றும் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆளுநர் நேரில் ஆய்வு

மன்னார் நகர சபையின் திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையம், மன்னார் பாலத்தடி சுற்றுலாப் பிரதேச அபிவிருத்தி மற்றும் நீலாசேனை மக்களின் நீண்டகால காணிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று (25.09.2026) வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். இக்களப் பயணத்தில் மன்னார் மாவட்டச் செயலர் க.கனகேஸ்வரன், மன்னார் நகரப் பிரதேச செயலர் கே.காந்தீபன் மற்றும் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் சாஜித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மன்னார் மாவட்டத்தில் திண்மக் கழிவு முகாமைத்துவம், சுற்றுலா அபிவிருத்தி மற்றும் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆளுநர் நேரில் ஆய்வு Read More »

தலைமன்னாரிலிருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய எட்டு மணல் திட்டுகளைப் பார்வையிட சுற்றுலா படகுச் சேவை

மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில், தலைமன்னாரிலிருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய எட்டு மணல் திட்டுகளை மக்கள் மற்றும் சுற்றுலாவிகள் நேரில் சென்று பார்வையிடும் வகையில் சுற்றுலா படகுச் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பரீட்சார்த்தப் படகுப் பயணம் இன்று (25.09.2026) வெள்ளிக்கிழமை இடம்பெற்றதுடன், எதிர்வரும் 28.09.2026 திங்கட்கிழமை முதல் சுற்றுலாவிகளுக்கான படகுச் சேவையை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் நடைபெறும் மூன்று நாள் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக

தலைமன்னாரிலிருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய எட்டு மணல் திட்டுகளைப் பார்வையிட சுற்றுலா படகுச் சேவை Read More »

அக்கரை மற்றும் காங்கேசன்துறை கடற்கரைகளில் முன்னெடுக்கப்படும் சுற்றுலா அபிவிருத்திப் பணிகளை ஆளுநர் நேரில் பார்வையிட்டார்

வலி. கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட அக்கரை கடற்கரை மற்றும் வலி. வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட காங்கேசன்துறை கடற்கரையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றுலா அபிவிருத்திப் பணிகளை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று (24.09.2026) வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது, வலி. கிழக்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட புத்தூர் 9ஆம் கட்டை வீதி தொடர்பில் பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பிலும் ஆளுநர் நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டார். குறித்த வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள

அக்கரை மற்றும் காங்கேசன்துறை கடற்கரைகளில் முன்னெடுக்கப்படும் சுற்றுலா அபிவிருத்திப் பணிகளை ஆளுநர் நேரில் பார்வையிட்டார் Read More »

கீரிமலையில் குவிக்கப்பட்டுள்ள கழிவுகளை இயந்திரங்களைப் பயன்படுத்தி துரிதமாக அகற்றுமாறு ஆளுநர் பணிப்பு

கீரிமலை பிரதேசத்தில் கடந்த காலங்களில் சுண்ணக்கல் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய பள்ளங்களில் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டை உடனடியாகக் கட்டுப்படுத்தும் வகையில், கழிவுகளை இயந்திரங்களைப் பயன்படுத்தி விரைவாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். கீரிமலை பிரதேசத்தில் கழிவுகள் குவிக்கப்பட்டுள்ள பகுதிகளை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று (24.09.2026) வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது, குறித்த பகுதி மிகவும்

கீரிமலையில் குவிக்கப்பட்டுள்ள கழிவுகளை இயந்திரங்களைப் பயன்படுத்தி துரிதமாக அகற்றுமாறு ஆளுநர் பணிப்பு Read More »

புதிய குளம் அமைத்தல், குளங்கள் தூர்வாரல் பணிகளை ஆளுநர் நேரில் பார்வையிட்டார்

புத்தூர்–மீசாலை வீதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் குளம், கந்தரோடைக் குளத்தின் தூர்வாரல் பணிகள் மற்றும் உடுவில் குளம் ஆகியவற்றை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று (24.09.2026) வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது, நீர்வளங்களைப் பாதுகாத்து எதிர்காலத் தேவைகளுக்காக அதிகளவில் பயன்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். புத்தூர்–மீசாலை வீதியில் கிறீன் லேயர் அமைப்பால் புதிய குளம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்த இப்பணிகளை நேரில்

புதிய குளம் அமைத்தல், குளங்கள் தூர்வாரல் பணிகளை ஆளுநர் நேரில் பார்வையிட்டார் Read More »

“வடக்கு மாகாணத்திலும் முதலீடுகளை மேற்கொள்ள ஜப்பானிய முதலீட்டாளர்கள் ஆர்வம்” – ஜப்பானியத் தூதுவர்

வடக்கு மாகாணத்திலும் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சில ஜப்பானிய முதலீட்டாளர்கள் ஆர்வம் கொண்டுள்ளதாகவும், அவர்கள் இலங்கையின் தற்போதைய நிலைமைகளையும் வடக்கு மாகாணத்தின் சூழலையும் அவதானித்து வருவதாகவும் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகியோ ஐசோமாதா அவர்கள், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் தெரிவித்தார். வடக்கு மாகாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர், வடக்கு மாகாண ஆளுநர் அவர்களை இன்று (23.09.2026) புதன்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்து, பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார். இச்சந்திப்பின் ஆரம்பத்தில்,

“வடக்கு மாகாணத்திலும் முதலீடுகளை மேற்கொள்ள ஜப்பானிய முதலீட்டாளர்கள் ஆர்வம்” – ஜப்பானியத் தூதுவர் Read More »