Balasingam Kajenderan

யாழ்ப்பாணத்தில் குழாய்க் கிணறுகள் அமைப்பதை ஒழுங்குமுறைப்படுத்த நடவடிக்கை – திருத்திய வர்த்தமானி வெளியிட கோரிக்கை

யாழ்ப்பாண மாவட்டத்தில் குறிப்பாக, எந்தவொரு முறையான கண்காணிப்புமின்றி குழாய்க் கிணறுகள் அமைக்கப்படுவதையும், அதன் மூலம் குடாநாட்டின் நிலத்தடி நீர்வளத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் கருத்திற்கொண்டு, குழாய்க் கிணறுகள் அமைக்கும் நடவடிக்கையை முறையான ஒழுங்குமுறையின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற ஆரம்பக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் குழாய்க் கிணறுகள் அமைப்பதை ஒழுங்குமுறைப்படுத்துவது தொடர்பான ஆரம்பக் கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நேற்று […]

யாழ்ப்பாணத்தில் குழாய்க் கிணறுகள் அமைப்பதை ஒழுங்குமுறைப்படுத்த நடவடிக்கை – திருத்திய வர்த்தமானி வெளியிட கோரிக்கை Read More »

சிவராசா அனோஜனுக்கு கருணை கோரி ஜனாதிபதிக்கு கோரிக்கை மனு – ஆளுநர் உடனடியாக அனுப்பி வைப்பு

சவூதி அரேபியாவில் சாவுத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன் தொடர்பில், அவருக்கு கருணை வழங்கி தண்டனையைத் தளர்த்த அல்லது உயிரைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கை மனுவை மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு உடனடியாக அனுப்பி வைப்பதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்துள்ளார். தேசிய மகா சபை – வடக்கு மாகாண ஒன்றியம் மற்றும் கிழக்கு மாகாண ஒன்றியம் சார்பில் இக்கோரிக்கை மனு, இன்று

சிவராசா அனோஜனுக்கு கருணை கோரி ஜனாதிபதிக்கு கோரிக்கை மனு – ஆளுநர் உடனடியாக அனுப்பி வைப்பு Read More »

வடக்கு மாகாணத்தில் நூலக சேவைகள் பணியகத்தை உருவாக்கும் நடவடிக்கைக்கு 5 பேர் கொண்ட குழு நியமனம்

வடக்கு மாகாணத்தில் நூலக சேவைகள் பணியகத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் வகையில், அதற்கான வரைவை ஆராய்ந்து இரண்டு மாதங்களுக்குள் பணிகளை நிறைவு செய்து செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்தில் நூலக சேவைகள் பணியகம் ஒன்றை உருவாக்குவது தொடர்பான தொடர் கலந்துரையாடல் இன்று (22.09.2026) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போது, பணியகத்தை உருவாக்குவதற்கான தற்போதைய வரைவு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், அதனை மேலும் செம்மைப்படுத்துவதற்காக ஐந்து பேர் கொண்ட

வடக்கு மாகாணத்தில் நூலக சேவைகள் பணியகத்தை உருவாக்கும் நடவடிக்கைக்கு 5 பேர் கொண்ட குழு நியமனம் Read More »

“மாணவர்களின் புத்தாக்கச் சிந்தனைகள் எதிர்காலத் தலைமைத்துவத்துக்கு அடித்தளமாக அமையும்” – ஆளுநர் நா. வேதநாயகன்

aபாடசாலை மாணவர்களிடையே புத்தாக்கச் சிந்தனைகளைத் தூண்டும் கண்காட்சிகளை நடத்துவதை நான் வரவேற்கின்றேன். மாணவர்களின் புத்தாக்கச் சிந்தனைகளின் வெளிப்பாடு, அவர்கள் எதிர்காலத்தில் உயர்ந்த பதவிகளுக்கு வரும்போது ஆளுமையுள்ளவர்களாகவும், துரிதமாகவும் புத்தாக்கமாகவும் சமூக நலன் சார்ந்தும் முடிவெடுக்கக்கூடியவர்களாகவும் மிளிர்வதற்கான வாய்ப்பாக அமையும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் ‘GENESIS – 2026’ புத்தாக்கக் கண்காட்சி மற்றும் புத்தக வெளியீட்டு நிகழ்வு இன்று (22.09.2026) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம

“மாணவர்களின் புத்தாக்கச் சிந்தனைகள் எதிர்காலத் தலைமைத்துவத்துக்கு அடித்தளமாக அமையும்” – ஆளுநர் நா. வேதநாயகன் Read More »

18ஆவது வடக்கு மாகாண விளையாட்டு விழா நிறைவு – யாழ்ப்பாணம் முதலிடம், வவுனியா இரண்டாமிடம், மன்னார் மூன்றாமிடம்

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 18ஆவது வடக்கு மாகாண விளையாட்டு விழா இரண்டு நாட்களாக யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்று, நேற்று (20.09.2026) ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக நிறைவடைந்தது. இவ்விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீர வீராங்கனைகள் மற்றும் அணிகளுக்கான பரிசில்களை வழங்கி வைத்தார். இவ்விளையாட்டு விழாவில் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த

18ஆவது வடக்கு மாகாண விளையாட்டு விழா நிறைவு – யாழ்ப்பாணம் முதலிடம், வவுனியா இரண்டாமிடம், மன்னார் மூன்றாமிடம் Read More »

“பதவி என்பது கதிரையில் இருப்பதற்காகக் கிடைப்பதல்ல; மக்களுக்கு உதவுவதற்காக வழங்கப்படுவது” – ஆளுநர் நா. வேதநாயகன்

பதவி என்பது கதிரையில் இருப்பதற்காகக் கிடைப்பதல்ல, அது மக்களுக்கு உதவி செய்வதற்காகவே வழங்கப்படுகின்றது. பதவியில் இருப்பவர்கள் நூறு வீதம் நேர்மையுடன், எவ்வித பாகுபாடும் இன்றி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். 2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய மற்றும் வலய மட்டங்களில் முதலிடம் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று (20.09.2026) ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்ப்பாணம் செம்மணி வீதியிலுள்ள தொண்டைமானாறு தேசிய வெளிக்கள

“பதவி என்பது கதிரையில் இருப்பதற்காகக் கிடைப்பதல்ல; மக்களுக்கு உதவுவதற்காக வழங்கப்படுவது” – ஆளுநர் நா. வேதநாயகன் Read More »

வடக்கு மாகாண சுகாதாரத்துறையை வலுப்படுத்த நான்கு நாட்களில் 2,103 மில்லியன் ரூபா பெறுமதியான 6 வேலைத்திட்டங்கள் ஆரம்பம்

வடக்கு மாகாண சுகாதாரத்துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில், கடந்த நான்கு நாள்களில் 2,103 மில்லியன் ரூபா பெறுமதியான ஆறு முக்கிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைகளில் தலா 600 மில்லியன் ரூபா பெறுமதியான சுகாதாரத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதுடன், வவுனியாவில் 170 மில்லியன் ரூபா செலவில் தாதியர் விடுதியும், கிளிநொச்சியில் 185 மில்லியன் ரூபா செலவில் மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான விடுதியும், சாவகச்சேரி

வடக்கு மாகாண சுகாதாரத்துறையை வலுப்படுத்த நான்கு நாட்களில் 2,103 மில்லியன் ரூபா பெறுமதியான 6 வேலைத்திட்டங்கள் ஆரம்பம் Read More »

“உடல், உள மேம்பாட்டுடன் தலைமைத்துவமும் சகோதரத்துவமும் வளர்ப்பதில் விளையாட்டுக்கு முக்கிய பங்கு உண்டு” – ஆளுநர்

18ஆவது வடக்கு மாகாண விளையாட்டு விழா துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பம் ‘உடல் மற்றும் உள மேம்பாட்டுக்கு விளையாட்டுக்கள் அவசியமானவை. அதேவேளை, தலைமைத்துவப் பண்பு மற்றும் சகோதரத்துவ உணர்வை வளர்த்தெடுப்பதற்கும் விளையாட்டுத்துறை முக்கிய பங்காற்றுகின்றது’ என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 18ஆவது வடக்கு மாகாண விளையாட்டு விழா இன்று (19.09.2026) சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண

“உடல், உள மேம்பாட்டுடன் தலைமைத்துவமும் சகோதரத்துவமும் வளர்ப்பதில் விளையாட்டுக்கு முக்கிய பங்கு உண்டு” – ஆளுநர் Read More »

வடக்கு மாகாண சுகாதாரத்துறையின் தனித்துவமான பொறுப்பைக் கருத்திற்கொண்டு மேலதிக நிதி ஒதுக்கீடு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்” – சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

வடக்கு மாகாண சுகாதார சேவையின் நடைமுறைச் சவால்கள், மருத்துவமனைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் மாகாண சுகாதாரத்துறையை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை கௌரவ அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான மாகாண அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று (19.09.2026) சனிக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இலங்கையிலுள்ள மாகாண சபைகளில் வடக்கு மாகாண சபையே அதிகளவான மருத்துவமனைகளை நிர்வகித்து வருவதுடன், மாவட்டப் பொது மருத்துவமனைகளும்

வடக்கு மாகாண சுகாதாரத்துறையின் தனித்துவமான பொறுப்பைக் கருத்திற்கொண்டு மேலதிக நிதி ஒதுக்கீடு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்” – சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ Read More »

தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையின் சுகாதார வசதிகளை சுகாதார அமைச்சர் மற்றும் ஆளுநர் நேரில் பார்வையிட்டனர்

சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை கௌரவ அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு இன்று (18.09.2026) வெள்ளிக்கிழமை மாலை கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டனர். இதன்போது, மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவர் விடுதி, நோயாளர் விடுதிகள் மற்றும் மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் ஆகியவற்றை அமைச்சர் மற்றும் ஆளுநர் நேரில் பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையின் அத்தியட்சகர், மருத்துவ

தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையின் சுகாதார வசதிகளை சுகாதார அமைச்சர் மற்றும் ஆளுநர் நேரில் பார்வையிட்டனர் Read More »