Balasingam Kajenderan

“புதிய அனுமதி வழங்கப்பட்ட பின்னர் மாகாண சபைகளில் சுகாதார சேவை உதவியாளர்களுக்கான நியமனத்தை முதலில் வழங்கியது வடக்கு மாகாண சபை” – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

புதிய அனுமதி வழங்கப்பட்ட பின்னர் இலங்கையிலுள்ள மாகாண சபைகளில் சுகாதார சேவை உதவியாளர்களுக்கான நியமனத்தை முதலில் வழங்கியது வடக்கு மாகாண சபையாகும். இதற்காக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர், பிரதம செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அனைவரையும் நன்றியுடன் பாராட்டுகின்றேன் என சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை கௌரவ அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் சுகாதார சேவை உதவியாளர்கள் 350 பேருக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (18.09.2026) வெள்ளிக்கிழமை மாலை […]

“புதிய அனுமதி வழங்கப்பட்ட பின்னர் மாகாண சபைகளில் சுகாதார சேவை உதவியாளர்களுக்கான நியமனத்தை முதலில் வழங்கியது வடக்கு மாகாண சபை” – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ Read More »

*கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவுக்கு கைவினைப் பொருட்களைப் புத்தாக்கமாக வடிவமைத்துள்ளீர்கள்; இவ்வாறான புத்தாக்க சிந்தனையாளர்கள் வடக்கு மாகாணத்தில் இருப்பதையிட்டு பெருமிதம் கொள்கின்றோம்” – ஆளுநர்*

நாங்கள் கற்பனையில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு உங்கள் கைவினைப் பொருட்களைப் புத்தாக்கமாக வடிவமைத்துள்ளீர்கள். இவ்வாறான புத்தாக்க சிந்தனையாளர்கள் எமது வடக்கு மாகாணத்தில் இருப்பதையிட்டு நாங்கள் பெருமிதம் கொள்கின்றோம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தின் பாரம்பரிய கைவினைக் கலைகளையும், கைவினைஞர்களின் ஆற்றல்களையும் வெளிக்கொணர்ந்து, அவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட மாகாண கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விருது வழங்கும் விழா – 2026 இன்று (18.09.2026)

*கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவுக்கு கைவினைப் பொருட்களைப் புத்தாக்கமாக வடிவமைத்துள்ளீர்கள்; இவ்வாறான புத்தாக்க சிந்தனையாளர்கள் வடக்கு மாகாணத்தில் இருப்பதையிட்டு பெருமிதம் கொள்கின்றோம்” – ஆளுநர்* Read More »

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் செயற்பாடுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் செயற்பாடுகள் உறுப்பினர்களின் கையொப்பத்துடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இன்று (18.09.2026) வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்வில், நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் உறுப்பினர்கள் உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டனர். யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை முறையான நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் முன்னெடுத்து, அதன் நோக்கங்களைத் தொடர்ந்து செயற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள இச்சபையில் பதவி வழியாக நான்கு உறுப்பினர்களும், துறைசார்

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் செயற்பாடுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம் Read More »

மருத்துவமனை வளர வேண்டுமெனில் கட்டடங்களுடன் மக்களின் நம்பிக்கையும் வளர வேண்டும்” – ஆளுநர் நா.வேதநாயகன்

ஒரு மருத்துவமனையின் வளர்ச்சி கட்டடங்களை அமைப்பதோடு முடிவடைவதில்லை, மருத்துவ சேவையின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதற்கேற்ப மருத்துவமனையின் உட்கட்டமைப்பும் தொடர்ந்து முன்னேற வேண்டும். அதைவிட முக்கியமாக, மருத்துவமனையின் மீது மக்களின் நம்பிக்கை வளர வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான புதிய விடுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (17.09.2026) வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. 185 மில்லியன் ரூபா செலவில்

மருத்துவமனை வளர வேண்டுமெனில் கட்டடங்களுடன் மக்களின் நம்பிக்கையும் வளர வேண்டும்” – ஆளுநர் நா.வேதநாயகன் Read More »

“கட்டடங்களும் மருத்துவ உபகரணங்களும் அவசியம்; ஆனால் அவற்றை இயக்கும் மனிதவளமே சுகாதார சேவையின் உயிர்நாடி” – ஆளுநர் நா.வேதநாயகன் வவுனியா மாவட்டப் பொது மருத்துவமனையில் தாதியர் விடுதி கட்டடத்துக்கு 170 மில்லியன் ரூபா செலவில் அடிக்கல்

சுகாதார சேவைக்குத் தேவையான கட்டடங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் அவசியமானவை. ஆனால், அவற்றை இயக்குகின்ற மனித வளமே சுகாதார சேவையின் உயிர்நாடியாகும். குறிப்பாக நோயாளிகளுடன் மிக நெருக்கமாகவும் தொடர்ச்சியாகவும் பணியாற்றும் தாதியர் உத்தியோகத்தர்களுக்குச் சிறந்த பணிச்சூழலை ஏற்படுத்துவது, தரமான சுகாதார சேவையை உறுதிப்படுத்துவதற்கு அத்தியாவசியமானது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வவுனியா மாவட்டப் பொது மருத்துவமனையில் 170 மில்லியன் ரூபா மதிப்பீட்டில், மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ்

“கட்டடங்களும் மருத்துவ உபகரணங்களும் அவசியம்; ஆனால் அவற்றை இயக்கும் மனிதவளமே சுகாதார சேவையின் உயிர்நாடி” – ஆளுநர் நா.வேதநாயகன் வவுனியா மாவட்டப் பொது மருத்துவமனையில் தாதியர் விடுதி கட்டடத்துக்கு 170 மில்லியன் ரூபா செலவில் அடிக்கல் Read More »

‘முல்லைத்தீவு இனி பின்தங்கிய மாவட்டம் என்ற பெயரால் அறியப்படக் கூடாது; முன்னேற்றத்தின் புதிய அத்தியாயத்தை எழுதும் மாவட்டமாகத் திகழ வேண்டும்’ – ஆளுநர்

முல்லைத்தீவு இனி பின்தங்கிய மாவட்டம் என்ற பெயரால் மாத்திரம் அறியப்படக் கூடாது, முன்னேற்றத்தின் புதிய அத்தியாயத்தை எழுதும் மாவட்டமாக அறியப்பட வேண்டும். மக்கள் சிகிச்சைக்காக வேறு மாவட்டங்களை நோக்கி நீண்ட தூரம் செல்ல வேண்டாத வகையில், தமது மாவட்டத்திலேயே தரமான சுகாதார சேவைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையை உருவாக்குவதே எமது நோக்கம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இந்திய அரசின் 600 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் நிர்மாணிக்கப்படவுள்ள

‘முல்லைத்தீவு இனி பின்தங்கிய மாவட்டம் என்ற பெயரால் அறியப்படக் கூடாது; முன்னேற்றத்தின் புதிய அத்தியாயத்தை எழுதும் மாவட்டமாகத் திகழ வேண்டும்’ – ஆளுநர் Read More »

‘மன்னார் மக்களின் சுகாதார நம்பிக்கைக்கான அடிக்கல்லாகவே இந்த அடிக்கல்லை பார்க்கின்றேன்’ – ஆளுநர் நா. வேதநாயகன்

மன்னார் மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் தாங்கள் போதிய கவனம் பெறவில்லை என்ற உணர்வுடன் இருந்ததை நான் அறிவேன். ஆனால், இந்த நிலைமை படிப்படியாக மாறிக் கொண்டிருக்கிறது. இன்று இந்திய அரசாங்கத்தின் நன்கொடையுடன் புதிய அவசர சிகிச்சைப் பிரிவு உருவாகிறது. மருத்துவர்களுக்கான விடுதி வருகிறது. சிறுவர் விடுதி உருவாகிறது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் இந்திய அரசின் 600 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய

‘மன்னார் மக்களின் சுகாதார நம்பிக்கைக்கான அடிக்கல்லாகவே இந்த அடிக்கல்லை பார்க்கின்றேன்’ – ஆளுநர் நா. வேதநாயகன் Read More »

மன்னார் மக்களுக்கான நவீன அவசர மருத்துவ சேவை: 600 மில்லியன் ரூபா புதிய கட்டடத்துக்கு அடிக்கல்

மன்னார் மாவட்ட மக்களுக்கு அவசர மற்றும் தீவிர மருத்துவ சேவைகளை விரைவாகவும் ஒருங்கிணைந்த முறையிலும் வழங்குவதற்குத் தேவையான நவீன வசதிகளுடன், மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான புதிய கட்டடம் இந்திய அரசின் 600 மில்லியன் ரூபா நிதியுதவியில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்திய அரசின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்துக்கான அடிக்கல் நடுகை செய்யும் நிகழ்வு இன்று (16.09.2026) புதன்கிழமை காலை நடைபெற்றது. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, கௌரவ

மன்னார் மக்களுக்கான நவீன அவசர மருத்துவ சேவை: 600 மில்லியன் ரூபா புதிய கட்டடத்துக்கு அடிக்கல் Read More »

அலியாமருதமடுக் குளம் தொடர்பான பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை எட்டுவதற்கு நடவடிக்கை – ஆளுநர் தலைமையில் உயர்மட்டக் கலந்துரையாடல்

வவுனியா மாவட்டத்தின் வவுனியா பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அலியாமருதமடுக் குளம் தொடர்பில் முன்வைக்கப்பட்டு வரும் பல்வேறு முறைப்பாடுகளை ஆராய்ந்து, அவற்றுக்கு ஒழுங்குமுறையானதும் நிரந்தரமானதுமான தீர்வை எட்டுவதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அலியாமருதமடுக் குளம் தொடர்பில் சிலரால் தொடர்ச்சியாக பல்வேறு அரச திணைக்களங்களுக்கு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், பிரச்சினையின் உண்மை நிலையை நேரில் ஆராய்ந்து, அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி தீர்வு காண

அலியாமருதமடுக் குளம் தொடர்பான பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை எட்டுவதற்கு நடவடிக்கை – ஆளுநர் தலைமையில் உயர்மட்டக் கலந்துரையாடல் Read More »

வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வீதி அபிவிருத்திப் பணிகளை ஆளுநர் நேரில் பார்வையிட்டார்

வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீதி மற்றும் பாலம் அமைக்கும் பணிகளின் முன்னேற்றத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் ஆகியோர் இன்று (15.09.2026) செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர். இதன்போது, நெடுங்கேணி–கூளாங்குளம் வீதியின் 1.86 கிலோமீற்றர் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பாலம் மற்றும் பிரமணாலங்குளம்–பரப்புக்கடந்தான் வீதியின் 5.55 கிலோமீற்றர் பகுதியில் 200 மீற்றர் நீளமான கொங்கிறீட் வீதியும் ஆற்றுச்சருக்கையும் அமைக்கும் பணிகள்

வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வீதி அபிவிருத்திப் பணிகளை ஆளுநர் நேரில் பார்வையிட்டார் Read More »