‘நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை’ தேசிய செயற்பாட்டின் கீழ், நேர்மையான அரசு சேவையை வலுப்படுத்தும் நோக்கில் வடக்கு மாகாண ஆளுநர் செயலக உத்தியோகத்தர்களுக்கான முதல்நாள் சத்தியப் பிரமாண நிகழ்வு இன்று திங்கட்கிழமை (27.07.2026) காலை 9 மணிக்கு ஆளுநர் செயலக முன்றலில் நடைபெற்றது.
தேசியக் கொடி, மாகாணக் கொடி என்பன ஆளுநரின் உதவிச் செயலாளர் மற்றும் ஆளுநர் செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோரால் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, உத்தியோகத்தர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு நடைபெற்றது. இதன் பின்னர் நேர்மை வாரம் தொடர்பில் ஆளுநரின் உதவிச் செயலாளர் ஜி.ஏகாந்தன் உரையாற்றினார். ஆளுநர் செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் பங்கேற்றனர்.




