யாழ். பல்கலைக்கழக வணிகத்துறை பேராசிரியர் க.தேவராஜா அவர்களின் பவளவிழாவில் ஆளுநர் வாழ்த்துரை வழங்கினார்
பேராசிரியர் க.தேவராஜா அவர்கள் உண்மையிலேயே மிகவும் பண்பான மற்றும் மனிதநேயம் மிக்க ஒரு மனிதர். சிறியவர்கள், பெரியவர்கள் என எவ்வித வேறுபாடும் இன்றி அனைவரையும் ஒரு சிறு சிரிப்போடு சமமாக மதிக்கும் அவரது குணமே அவரைச் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் வைத்துள்ளது, என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிகத்துறையின் முதலாவது பேராசிரியர் க.தேவராஜா அவர்களின் 75ஆவது அகவையைக் குறிக்கும் பவளவிழா நிகழ்வு இன்று (24.05.2026) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 […]
