மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் தலைமையிலான அரசாங்கம் ஊழல் ஒழிப்புக்கு மிக உயர்ந்த முன்னுரிமையை அளித்துச் செயற்படுகின்றது. எனவே, எமது மாகாண அரச பணியிலும் ஊழலுக்குச் சிறிதளவேனும் இடமளிக்கக் கூடாது. – ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை
மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் தலைமையிலான அரசாங்கம் எதிர்பார்க்கின்ற, மக்கள் நேய அரச சேவையை வழங்குவதற்கு அனைவரும் இப்புத்தாண்டில் அர்ப்பணிப்புடனும் உத்வேகத்துடனும் பணியாற்ற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்தார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் 2026ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (01.01.2026) காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஆளுநர் செயலகப் பணியாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஆளுநர் செயலகப் பணியாளர்கள் முன்னிலையில், ஆளுநர் […]
