இலங்கைக்கு உத்தியோகபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள ‘ஸ்ரீ பஞ்ச் அக்னி அகாதாஷவின் தலைவரான சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ், யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான ஆன்மீக மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இலங்கைக்கு உத்தியோகபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள ‘ஸ்ரீ பஞ்ச் அக்னி அகாதாஷவின் தலைவரான சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ் அவர்கள், இன்று செவ்வாய்க்கிழமை (24.02.2026) மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். உலங்குவானூர்தி மூலம் பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ் மற்றும் அவரது சிறப்புத் தூதுக்குழுவினர், அங்கிருந்து யாழ்ப்பாணம் நகரிலுள்ள ஜெட்விங் விடுதிக்குச் […]
