layola- sinhala

சென்னை லயோலா கல்லூரியில் பட்டப் பின் படிப்பை (Postgraduate Studies) மேற்கொண்டு வரும் மாணவர்கள், தமது கல்வி நடவடிக்கையின் ஒரு பகுதியாக இலங்கைக்கு 10 நாள் கல்விச் சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ளனர்.

அவர்கள் இன்று புதன்கிழமை (12.11.2025) யாழ்ப்பாண மாவட்டத்துக்கு வருகை தந்து, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை தந்தை செல்வா கலையரங்கில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

போருக்குப் பின்னரான சமூக, பொருளாதார மற்றும் நிர்வாக நிலைமைகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் தனது நிர்வாக அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டதுடன், அவர்கள் முன்வைத்த கேள்விகளுக்கும் விரிவாகப் பதிலளித்தார்.