Uncategorized

19 OTHIYAMALAI SIN

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒதியமலை பிரதேச மக்கள் முன்வைத்த வீதிப் புனரமைப்பு, நீர்ப்பாசனம், குடிநீர், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு தேவைகள் தொடர்பில் நேரில் ஆராய்ந்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினர் இன்று (09.10.2026) வெள்ளிக்கிழமை ஒதியமலை பிரதேசத்துக்குக் களப் பயணம் மேற்கொண்டு, மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்ததுடன், அவர்கள் சுட்டிக்காட்டிய பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தித் தேவைகள் தொடர்பான இடங்களை […]

19 OTHIYAMALAI SIN Read More »

54 vembadi sin

aபாடசாலை மாணவர்களிடையே புத்தாக்கச் சிந்தனைகளைத் தூண்டும் கண்காட்சிகளை நடத்துவதை நான் வரவேற்கின்றேன். மாணவர்களின் புத்தாக்கச் சிந்தனைகளின் வெளிப்பாடு, அவர்கள் எதிர்காலத்தில் உயர்ந்த பதவிகளுக்கு வரும்போது ஆளுமையுள்ளவர்களாகவும், துரிதமாகவும் புத்தாக்கமாகவும் சமூக நலன் சார்ந்தும் முடிவெடுக்கக்கூடியவர்களாகவும் மிளிர்வதற்கான வாய்ப்பாக அமையும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் ‘GENESIS – 2026’ புத்தாக்கக் கண்காட்சி மற்றும் புத்தக வெளியீட்டு நிகழ்வு இன்று (22.09.2026) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம

54 vembadi sin Read More »

41 kili hospital sin

ஒரு மருத்துவமனையின் வளர்ச்சி கட்டடங்களை அமைப்பதோடு முடிவடைவதில்லை, மருத்துவ சேவையின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதற்கேற்ப மருத்துவமனையின் உட்கட்டமைப்பும் தொடர்ந்து முன்னேற வேண்டும். அதைவிட முக்கியமாக, மருத்துவமனையின் மீது மக்களின் நம்பிக்கை வளர வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான புதிய விடுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (17.09.2026) வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. 185 மில்லியன் ரூபா செலவில்

41 kili hospital sin Read More »

12 moolai sin

கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கவும், குறைந்த வட்டி விகிதத்தில் நிதி வசதிகளை வழங்கக்கூடிய வலுவான கூட்டுறவு அமைப்புகள் அவசியம். மக்களைப் பொருளாதார ரீதியாகப் பாதிக்கும் நுண்நிதி நிறுவனங்களுக்கு மாற்றாகவும், மக்களின் நலனை முன்னிறுத்தும் வலுவான நிறுவனங்களாகவும் கூட்டுறவுச் சங்கங்கள் செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். தொல்புரம் மூளாய் ஐக்கிய பரஸ்பர சகாய சங்கத்தின் 1926–2026 நூற்றாண்டு விழா இன்று (06.09.2026) ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்ப்பாணம் மூளாய்

12 moolai sin Read More »

46 transport sin

வீதிப் போக்குவரத்து விபத்துக்களைத் தடுப்பதற்கும், உயிரிழப்புகள் மற்றும் காயங்களைக் குறைப்பதற்கும் வீதியைப் பயன்படுத்தும் அனைவரிடமும் பொறுப்புணர்வை உருவாக்கும் நோக்கில், போக்குவரத்து அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வுச் செயற்பாடுகள் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையும் யாழ்ப்பாண மருத்துவச் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த வீதிப் போக்குவரத்து விபத்து

46 transport sin Read More »

40 law sin

வடக்கு மாகாணத்தின் மக்கள் தேவைகளை திறம்பட நிறைவேற்றுவதற்கு மாகாண நிர்வாகத்தின் ஒவ்வொரு அங்கமும் ஒரே திசையிலும் ஒரே நோக்கத்துடனும் செயற்பட வேண்டும். தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள், தன்முனைப்பு மற்றும் அதிகாரப் போட்டிகளுக்கு இடமளிக்காமல், அனைவரும் மக்களுக்காக ஒரே அணியாகச் செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் ஆளணி மற்றும் பயிற்சிப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிர்வாகச் சட்டம் தொடர்பான பயிற்சிப் பட்டறை இன்று (18.08.2026) செவ்வாய்க்கிழமை கைதடியில்

40 law sin Read More »

38 missing sin

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகளை ஒழுங்குமுறையுடன் முன்னெடுப்பது தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று (17.08.2026) திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. காணாமல் ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் இவ்வாண்டு சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறை மாவட்டங்களில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறவுள்ள நிகழ்வு தொடர்பிலும், அதனுடன்

38 missing sin Read More »

උතුරු පළාත් කාන්තා කටයුතු අමාත්‍යාංශය යටතේ ඇති දෙපාර්තමේන්තු වල මාසික ප්‍රගති සමාලෝචන රැස්වීම ගරු ආණ්ඩුකාරතුමාගේ ප්‍රධානත්වයෙන් පැවැත්විණි.

උතුරු පළාත් කාන්තා කටයුතු, පුනරුත්ථාපන, සමාජ සේවා, සමුපකාර, ආහාර සැපයුම් හා බෙදාහැරීම් සහ කර්මාන්ත හා ව්‍යවසායකත්ව සංවර්ධන හා වාණිජ කටයුතු අමාත්‍යාංශය යටතේ ඇති දෙපාර්තමේන්තු වල මාසික ප්‍රගති සමාලෝචන රැස්වීම අද (2026.08.06) උතුරු පළාත් ගරු ආණ්ඩුකාරතුමා එන්. වේදනායකන් මහතාගේ ප්‍රධානත්වයෙන් ආණ්ඩුකාර ලේකම් කාර්යාලයේදී පැවැත්විණි. මෙම රැස්වීමේදී, කර්මාන්ත දෙපාර්තමේන්තුව, සමාජ සේවා දෙපාර්තමේන්තුව, සමුපකාර දෙපාර්තමේන්තු සහ සමුපකාර සේවක

උතුරු පළාත් කාන්තා කටයුතු අමාත්‍යාංශය යටතේ ඇති දෙපාර්තමේන්තු වල මාසික ප්‍රගති සමාලෝචන රැස්වීම ගරු ආණ්ඩුකාරතුමාගේ ප්‍රධානත්වයෙන් පැවැත්විණි. Read More »

42 transport sin

கிளிநொச்சியில் அமைந்துள்ள வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (31.07.2026) திடீர் கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போது அதிகார சபைக்குச் சென்ற கௌரவ ஆளுநர் அவர்கள், அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடியதோடு, அவர்கள் தமது கடமையின்போது எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார். இந்தக் கண்காணிப்பு பயணத்தின்போது, வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார

42 transport sin Read More »

41 mullai land sin

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கௌரவ பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்தார். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள காணிகளைச் சிவில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (31.07.2026) நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் வரவேற்புரையாற்றிய முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன், ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற

41 mullai land sin Read More »