vavu ladies sinhala

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், வவுனியா – கிராமிய பெண்கள் அமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (11.11.2025) நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாணத்தில் தொழில்நுட்பத்தின் மூலம் ஏற்படும் பால்நிலை அடிப்படையிலான வன்முறையை எதிர்கொள்வதற்கான ஆதரவு குறிப்பு நூல் ஆளுநருக்கு வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் தம்மால் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வுச் செயற்பாடுகள் அதன் ஊடாக கிடைக்கப்பெற்ற தகவல்களையும் ஆளுநருடன் பகிர்ந்து கொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் அவர்களும் பங்கேற்றார்.