ஆளுநர்

கூட்டுறவுத்துறை வளர்ச்சியடைய வேண்டுமாயின் மக்கள் மத்தியில் அது குறித்த ஆழமான நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும். – ஆளுநர் தெரிவித்தார்.

மக்களின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் வென்றெடுக்கும் அமைப்புகளாலேயே ஒரு சமூகத்தை வலுவாகக் கட்டியெழுப்ப முடியும் எனத் தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பொருளாதார நெருக்கடியான காலகட்டங்களில் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதில் கூட்டுறவுத்துறையே அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளது எனவும் தெரிவித்தார். ஏழாலை மேற்கின் மைந்தனும் கூட்டுறவாளனுமான அமரர் கந்தையா மகாதேவன் அவர்களின் திருவுருவச்சிலை திறப்பு விழா நிகழ்வு இன்று புதன்கிழமை பிற்பகல் (24.06.2026) ஏழாலை மேற்கு ஸ்ரீ விநாயகர் ஐக்கிய நாணயச் சங்கத்தில் நடைபெற்றது. இந்த […]

கூட்டுறவுத்துறை வளர்ச்சியடைய வேண்டுமாயின் மக்கள் மத்தியில் அது குறித்த ஆழமான நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும். – ஆளுநர் தெரிவித்தார். Read More »

வடக்கு மாகாண இறைவரித் திணைக்கள உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாண இறைவரித் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் வரி மதிப்பீட்டாளர்கள் மற்றும் வரி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (24.06.2026) புதன்கிழமை காலை நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலின்போது, வரி மதிப்பீட்டாளர்கள் மற்றும் வரி உத்தியோகத்தர்களின் சேவைப் பிரமாணக் குறிப்பு தொடர்பில் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட கட்டளை குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இதற்கமைவாக, வடக்கு மாகாணத்துக்குரிய புதிய சேவைப் பிரமாணக் குறிப்பு எவ்வாறு

வடக்கு மாகாண இறைவரித் திணைக்கள உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் விசேட அழைப்பின் பேரில், பதிவாளர் நாயகத்துடனான உயர்மட்டக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் ‘வெளிப்படுத்தல் உறுதி’ ஊடாக இடம்பெறும் மிகப் பெரிய காணி மோசடிகளைத் தடுக்கும் வகையில், நொத்தாரிசு சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டத்திருத்தங்கள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்டவரைஞர் திணைக்களங்களுடன் விரைவில் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பதிவாளர் நாயகம் திருமதி சசிதேவி ஜலதீபன் அவர்கள் உறுதியளித்துள்ளார். வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் விசேட அழைப்பின் பேரில், பதிவாளர் நாயகத்துடனான உயர்மட்டக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (24.06.2026) புதன்கிழமை

கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் விசேட அழைப்பின் பேரில், பதிவாளர் நாயகத்துடனான உயர்மட்டக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. Read More »

மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும் என்ற அதியுயர் பொறுப்புணர்வுடன் களமட்ட உத்தியோகத்தர்கள் செயற்பட வேண்டும். – கௌரவ ஆளுநர்

போர் முடிந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னமும் எங்கள் மக்களின் காணிப் பிரச்சினைகளை எவ்வளவு காலத்துக்கு நாம் இழுத்தடிக்கப் போகின்றோம்? பாதிக்கப்பட்டவர்கள் எமது முல்லைத்தீவு மக்கள் என்ற உணர்வோடும், அவர்களுக்காகவே நாம் சேவையாற்றுகின்றோம் என்ற கடமையுணர்வோடும் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார். வடக்கு மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்தின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு மாவட்டத்தின் ‘5 ஆண்டுச் செயலாற்றுகை’ தொடர்பான விசேட மீளாய்வுக் கூட்டம், கிளிநொச்சியில் அமைந்துள்ள

மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும் என்ற அதியுயர் பொறுப்புணர்வுடன் களமட்ட உத்தியோகத்தர்கள் செயற்பட வேண்டும். – கௌரவ ஆளுநர் Read More »

நிர்ணயிக்கப்பட்ட கால எல்லைக்குள் மக்களின் காணிப் பிரச்சினைகளைத் தீர்த்து, ஆவணங்களை வழங்கி வைக்க வேண்டியது அதிகாரிகள் அனைவரதும் பொறுப்பும் கடமையுமாகும் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

மக்களின் காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதுதான் பிரதேச செயலாளர்களின் முக்கிய பொறுப்பாகவும் கடமையாகவும் இருக்க வேண்டும். பொதுமக்களை அலைக்கழித்துக் கொண்டிருக்காதீர்கள். நிர்ணயிக்கப்பட்ட கால எல்லைக்குள் மக்களின் காணிப் பிரச்சினைகளைத் தீர்த்து, அவர்களுக்கான ஆவணங்களை வழங்கி வைக்க வேண்டியது அதிகாரிகள் அனைவரதும் பொறுப்பும் கடமையுமாகும் என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்டத்தின் ‘5 ஆண்டுச் செயலாற்றுகை’ தொடர்பான விசேட

நிர்ணயிக்கப்பட்ட கால எல்லைக்குள் மக்களின் காணிப் பிரச்சினைகளைத் தீர்த்து, ஆவணங்களை வழங்கி வைக்க வேண்டியது அதிகாரிகள் அனைவரதும் பொறுப்பும் கடமையுமாகும் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். Read More »

‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ திட்டத்தின் கீழ் கிளிநொச்சி, கோணாவில் காந்தி ஆரம்ப வித்தியாலத்தின் புதிய கற்றல் வளநிலைய திறப்பு விழா இன்று நடைபெற்றது.

கல்வி அமைச்சின் ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ திட்டத்தின் கீழ் 21 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கிளிநொச்சி, கோணாவில் காந்தி ஆரம்ப வித்தியாலயத்தின் இரண்டு மாடிகளைக் கொண்ட புதிய கற்றல் வளநிலையக் கட்டடத் திறப்பு விழா இன்று (23.06.2026) செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. பாடசாலை அதிபர் திருமதி வி.செல்வானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு புதிய கட்டடத்தை மாணவர்களின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகத் திறந்து

‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ திட்டத்தின் கீழ் கிளிநொச்சி, கோணாவில் காந்தி ஆரம்ப வித்தியாலத்தின் புதிய கற்றல் வளநிலைய திறப்பு விழா இன்று நடைபெற்றது. Read More »

‘நாமும் கரும்பும்’ செயற்றிட்டத்தின் கீழ், கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் பகுதியில் கரும்புச் செய்கையை மீள ஆரம்பிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்றது.

வடக்கின் வளங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என நான் பல தடவைகள் வலியுறுத்தியுள்ளேன். இன்று கரும்பு மீள்நடுகைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையானது, எமது வளங்களை நாம் உரிய வகையில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளோம் என்ற நம்பிக்கையைத் தருகின்றது, என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் ‘கரும்புத்தோட்டம்’ பகுதியில் பல தசாப்தங்களின் பின்னர் கரும்புச் செய்கையை மீள ஆரம்பிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இன்று (23.06.2026) செவ்வாய்கிழமை காலை நடைபெற்றது. ‘நாமும் கரும்பும்’ செயற்றிட்டத்தின்

‘நாமும் கரும்பும்’ செயற்றிட்டத்தின் கீழ், கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் பகுதியில் கரும்புச் செய்கையை மீள ஆரம்பிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்றது. Read More »

கல்விக்குச் சமாந்தரமாக இணைப்பாடவிதானச் செயற்பாடுகளான கலை மற்றும் விளையாட்டுத் துறைகளிலும் மாணவர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். – கௌரவ ஆளுநர்

விளையாட்டுகளில் ஈடுபடுவதன் ஊடாகவே, ஏனையோரை மதிப்பதற்கும் அவர்களின் திறமைகளை அங்கீகரித்துப் பாராட்டுவதற்குமான தலைமைத்துவப் பண்பையும், மிக முக்கியமாகச் சுய ஒழுக்கத்தையும் நாம் கற்றுக்கொள்ள முடியும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்டத் தடகளப் போட்டிகள், யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இன்று (22.06.2026) திங்கட்கிழமை காலை கௌரவ ஆளுநரால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்நிகழ்வின் ஆரம்பத்தில், அதிதிகள் பாண்ட் வாத்திய அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டனர்.

கல்விக்குச் சமாந்தரமாக இணைப்பாடவிதானச் செயற்பாடுகளான கலை மற்றும் விளையாட்டுத் துறைகளிலும் மாணவர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். – கௌரவ ஆளுநர் Read More »

‘ஹலோ ட்ரஸ்ட்’ (HALO Trust) மற்றும் ‘மக்’ (MAG) ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் மனிதாபிமான அடிப்படையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை முன்னெடுத்து வரும் ‘ஹலோ ட்ரஸ்ட்’ (HALO Trust) மற்றும் ‘மக்’ (MAG) ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (22.06.2026) திங்கட்கிழமை காலை நடைபெற்றது. இக்கலந்துரையாடலின்போது, மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்கள் வடக்கு மாகாணத்தில் இதுவரை ஆற்றியுள்ள அளப்பரிய சேவைகளுக்கு ஆளுநர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். குறிப்பாக, போரால் இடம்பெயர்ந்த மக்களின்

‘ஹலோ ட்ரஸ்ட்’ (HALO Trust) மற்றும் ‘மக்’ (MAG) ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் வடக்கு மாகாணத்தில் 566 பேர் 9 ‘ஏ’ சித்திகள்!

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை: வடக்கு மாகாணத்தில் 70.1 சதவீதமானோர் உயர்தரத்துக்குத் தகுதி ; 566 மாணவர்கள் 9 ‘ஏ’ சித்திகள்! நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (2025) பரீட்சைப் பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில், வடக்கு மாகாணத்திலிருந்து இப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 70.1 சதவீதமானோர் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பிரிவில் கற்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர். இம்முறை வெளியான பெறுபேறுகளின்படி, வடக்கு மாகாணத்தில் 566 மாணவர்கள் 9 பாடங்களிலும் ‘ஏ’

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் வடக்கு மாகாணத்தில் 566 பேர் 9 ‘ஏ’ சித்திகள்! Read More »