கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் இயன்முறை மருத்துவச் சிகிச்சைப் பிரிவுடன் பல்வேறு மருத்துவ வசதிகளை உள்ளடக்கிய புதிய கட்டடம் – ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் தற்போது போதிய இடவசதியின்றி இயங்கி வரும் இயன்முறை மருத்துவச் சிகிச்சைப் பிரிவின் தேவையை நிவர்த்தி செய்வதுடன், எதிர்கால மருத்துவத் தேவைகளையும் கருத்திற்கொண்டு பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய புதிய கட்டடமொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆராயப்பட்டது. கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் இயன்முறை மருத்துவச் சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய புதிய கட்டடம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று (10.09.2026) வியாழக்கிழமை […]
