கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் முயற்சிகள் மற்றும் வலியுறுத்தல்களின் பலனாக, முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தால் கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனைக்குப் புதிதாக 58 ஆளணி இடங்கள் உருவாக்கம்
வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் வலியுறுத்தல்களின் பலனாக, கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனைக்குப் புதிதாக 58 ஆளணி இடங்களை உருவாக்கி முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அனுமதியளித்துள்ளது. வடக்கு மாகாணத்துக்கான ஆளணி வெற்றிடங்கள் மற்றும் தேவைகள் குறித்து கௌரவ ஆளுநரால் விடுக்கப்பட்ட தொடர்ச்சியான கோரிக்கைகளையடுத்து, அது தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் பயனாக, சுமார் 13 ஆண்டுகளின் பின்னர் முகாமைத்துவ […]
