Balasingam Kajenderan

மின்னணு கொள்வனவு கண்காணிப்பு முறைமை மூலம் அரச கொள்வனவில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் வினைத்திறனை மேலும் வலுப்படுத்த வேண்டும் – ஆளுநர்

அரச கொள்வனவு என்பது ஒரு நிர்வாக நடைமுறை மாத்திரமல்ல, மக்களுக்காக ஒதுக்கப்படும் பொது நிதியை வீதிகள், கட்டடங்கள், சுகாதாரச் சேவைகள், கல்வி வசதிகள், குடிநீர் திட்டங்கள் மற்றும் ஏனைய பொதுச் சேவைகளாக மாற்றும் முக்கியப் பொறிமுறையாகும். எனவே, பெறுகை நடவடிக்கைகளில் ஏற்படும் ஒவ்வொரு தாமதமும் நேரடியாக மக்களுக்கான சேவை வழங்கலையும் மாகாண அபிவிருத்தியையும் பாதிக்கும் நிலையில், மின்னணு பெறுகை கண்காணிப்பு முறைமையை (ePMS) வெறுமனே ஒரு இணையக் கருவியாக அல்லாது, வெளிப்படையானதும், நேர்த்தியானதும், பொறுப்புக்கூறலுடனானதுமான கொள்வனவுக் கலாசாரத்தை […]

மின்னணு கொள்வனவு கண்காணிப்பு முறைமை மூலம் அரச கொள்வனவில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் வினைத்திறனை மேலும் வலுப்படுத்த வேண்டும் – ஆளுநர் Read More »

யாழ். மாவட்டக் குளங்களைத் தூர்வாரும் நடவடிக்கைகளில் நிலவும் சவால்களுக்கு தீர்வு காண நடவடிக்கை – ஆளுநர் பணிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள குளங்களைத் தூர்வாரி அவற்றின் நீர்ப்பிடிப்பு மற்றும் நீர்வளப் பயன்பாட்டை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள நடைமுறைச் சவால்களைத் துரிதமாகத் தீர்த்து, உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் இப்பணிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை வழங்கினார். யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள குளங்களைத் தூர்வாரும் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள சவால்களைத் தீர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று (31.08.2026) திங்கட்கிழமை மாலை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. குறிப்பாக

யாழ். மாவட்டக் குளங்களைத் தூர்வாரும் நடவடிக்கைகளில் நிலவும் சவால்களுக்கு தீர்வு காண நடவடிக்கை – ஆளுநர் பணிப்பு Read More »

ஒருங்கிணைந்த நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் காலநிலைத் தாங்குதிறன் திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்துக்கு நிதி; திட்ட முன்மொழிவுகளை விரைவாகத் தயாரிக்குமாறு ஆளுநர் வலியுறுத்தல்

ஒருங்கிணைந்த நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் காலநிலைத் தாங்குதிறன் திட்டத்தின் கீழ், வடக்கு மாகாணத்தில் திட்டங்களை விரைவாகத் தயாரித்து முன்வைக்கும் அளவுக்கேற்ப மேலதிக நிதியையும் பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. எனவே, அனைத்து தொடர்புடைய திணைக்களங்களும் ஒருங்கிணைந்து செயற்பட்டு, திட்டங்களை தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. உலக வங்கியின் நிதியுதவியுடன், மத்திய விவசாய, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சால் நடைமுறைப்படுத்தப்படும் ஒருங்கிணைந்த நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் காலநிலைத் தாங்குதிறன் திட்டத்தின்

ஒருங்கிணைந்த நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் காலநிலைத் தாங்குதிறன் திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்துக்கு நிதி; திட்ட முன்மொழிவுகளை விரைவாகத் தயாரிக்குமாறு ஆளுநர் வலியுறுத்தல் Read More »

வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை பார்வையிட்ட ஆளுநர்; தொழில்முனைவோருடன் நேரடிக் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தின் தொழில் முயற்சிகள், உற்பத்திப் பொருட்கள் மற்றும் தொழில்முனைவோரின் ஆற்றலை வெளிப்படுத்துவதுடன், சந்தை வாய்ப்புகளையும் முதலீட்டு தொடர்புகளையும் உருவாக்கும் முக்கிய தளமாக அமைந்துள்ள ‘வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2026’ஐ வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் பார்வையிட்டு, கண்காட்சியில் பங்கேற்ற தொழில்முனைவோருடன் கலந்துரையாடினார். வடக்கு கைத்தொழில் மன்றத்தின் ஒழுங்கமைப்பில் ‘வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2026’ யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஆளுநர் நேற்று (29.08.2026)

வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை பார்வையிட்ட ஆளுநர்; தொழில்முனைவோருடன் நேரடிக் கலந்துரையாடல் Read More »

கல்வித்துறையில் விசாரணைகளைத் துரிதப்படுத்துவது தொடர்பில் ஆராய்வு

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் காலதாமதமடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (29.08.2026) சனிக்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, கடந்த கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து முதலில் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, கல்வித்துறையில்

கல்வித்துறையில் விசாரணைகளைத் துரிதப்படுத்துவது தொடர்பில் ஆராய்வு Read More »

வடக்கு மாகாண உற்பத்திகளை உலகச் சந்தையுடன் இணைக்கும் பாலமாக வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – ஆளுநர்

வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை வெறுமனே ஒரு வர்த்தகக் கண்காட்சியாக நான் பார்க்கவில்லை. இது வடக்கு மாகாணத்தின் தொழில் முயற்சித் திறனை வெளிப்படுத்தும் மேடையாகவும், எமது உற்பத்திகளைச் சந்தையுடன் இணைக்கும் பாலமாகவும், முதலீட்டாளர்களை வடக்கு மாகாணத்துக்கு அழைக்கும் வாயிலாகவும் அமைகின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2026 இன்று (28.08.2026) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில், வடக்கு கைத்தொழில் மன்றத்தின் தலைவர் எஸ்.நகுலேஸ்வரன் தலைமையில்

வடக்கு மாகாண உற்பத்திகளை உலகச் சந்தையுடன் இணைக்கும் பாலமாக வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – ஆளுநர் Read More »

வடக்கு மாகாண ஒருவழி முதலீட்டு நுழைவாயிலின் செயற்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் – ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில் (One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில் செயற்படுத்தப்பட வேண்டும். அதன் நடைமுறைப்படுத்தலில் காணப்படும் சவால்கள் மற்றும் தாமதங்களை அடையாளம் கண்டு அவற்றைத் தீர்ப்பதுடன், தொடர்புடைய அதிகாரிகளின் திறன்களை மேலும் மேம்படுத்துவதற்குத் தேவையான பயிற்சிகளையும் வழங்கி இப்பொறிமுறையை வலுப்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். வடக்கு மாகாணத்தில் முதலீடுகளை இலகுபடுத்தும் நோக்கில்

வடக்கு மாகாண ஒருவழி முதலீட்டு நுழைவாயிலின் செயற்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் – ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல் Read More »

அனுபவமும் அறிவும் இணையும்போதுதான் சிறந்த நூல் உருவாகும் – ஆளுநர் நா. வேதநாயகன்

ஒரு சிறந்த நூலைப் படைப்பதற்கு அறிவு மாத்திரம் போதாது, யதார்த்தத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள அனுபவமும் அவசியம். அனுபவமும் அறிவும் ஒன்றிணையும் போதுதான் ஒரு நூல் சமூகத்துக்குப் பயனளிக்கும் வகையில் சிறப்புறும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ‘குழந்தைமைக் கல்வியும் ஆரம்பக் கல்வியின் செயற்பாடுகளும்’ மற்றும் ‘புலம்பெயர் நாடுகளில் இலங்கைத் தமிழ்’ ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு இன்று (26.08.2026) புதன்கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சபாலிங்கம் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம

அனுபவமும் அறிவும் இணையும்போதுதான் சிறந்த நூல் உருவாகும் – ஆளுநர் நா. வேதநாயகன் Read More »

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை பொறுப்பேற்பு; ஆளுநர் வாழ்த்து

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராகப் பொறுப்பேற்ற பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகைக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகையின் பணிப்பொறுப்பேற்பு நிகழ்வு இன்று (26.08.2026) புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் கலந்துகொண்டு புதிய ஆயருக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார். புதிய ஆயரின் பணிப்பொறுப்பேற்பை முன்னிட்டு நடைபெற்ற மத நிகழ்வில் மறைமாவட்டத்தின்

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை பொறுப்பேற்பு; ஆளுநர் வாழ்த்து Read More »

தேசிய மீலாதுன் நபி விழா – கௌரவ வடக்கு மாகாண ஆளுநரின் வாழ்த்துச் செய்தி

‘மனிதகுலத்துக்கு அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம்’ என்ற புனித குர்ஆன் வசனத்தின் மகத்தான பொருளை நினைவுகூரும் புனிதமான நாளாக மீலாதுன் நபி தினம் அமைகிறது. நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் பிறப்பையும், அவர்களின் உயரிய வாழ்வியல் நெறிகளையும் நினைவுகூரும் இந்நன்னாளில், வடக்கு மாகாண முஸ்லிம் மக்களுக்கும், இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும் எனது உளமார்ந்த மீலாதுன் நபி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனிதகுலத்துக்கு எடுத்துக்காட்டாகக் காட்டிய அன்பு, இரக்கம்,

தேசிய மீலாதுன் நபி விழா – கௌரவ வடக்கு மாகாண ஆளுநரின் வாழ்த்துச் செய்தி Read More »